Weather and environment · 1 outlet covered this

தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு? இன்றைய நிலவரம் (செப். 10)

How outlets told it

Dinamani654d ago

தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு? இன்றைய நிலவரம் (செப். 10)

Read at Dinamani
தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு? இன்றைய நிலவரம் (செப். 10)
Photo: Dinamani

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப். 10) சவரனுக்கு ரூ. 880 உயர்ந்துள்ளது. சர்வதேச அளவில் நிலவும் போர்ப் பதற்றம் காரணமாக உலக நாடுகள் அதிகளவில் தங்கத்தில் முதலீடுகளை செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால், தங்கத்தின் விலை அவ்வப்போது குறைந்தாலும் பெரும்பாலும் உயர்ந்து வருகிறது. சென்னையில் கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வரும் தங்கம் விலை, வாரத்தின் முதல்நாளான திங்கள்கிழமை சவரனுக்கு ரூ. 480 குறைந்து செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 1,120 உயர்ந்த நிலையில் புதன்கிழமை சவரனுக்கு ரூ. 1,000 குறைந்தது. இன்றைய தங்கம் நிலவரம்இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப். 10) கிராமுக்கு ரூ. 110 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,255-க்கும் சவரனுக்கு ரூ. 880 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,14,040-க்கும் விற்பனையாகிறது. இன்றைய வெள்ளி நிலவரம்வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ. 255 -க்கும் ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2,55,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.