அமீஷா பட்டேல் வீட்டில் திருட்டு - வேலைக்காரப் பெண் கைது
Read at The Hindu TamilCinema and entertainment · 1 outlet covered this
அமீஷா பட்டேல் வீட்டில் திருட்டு - வேலைக்காரப் பெண் கைது
How outlets told it

பிரபல இந்தி நடிகையான அமீஷா பட்டேல், தமிழில் விஜய்யுடன் ‘புதிய கீதை’ படத்தில் நடித்துள்ளார். இவருக்கு மும்பை சர்ச்கேட் பகுதியில் வீடு உள்ளது. இதில் அவருடைய தாய் ஆஷா பட்டேல் வசித்து வருகிறார். இந்த வீட்டில் வைத்திருந்த, வைரம் பதித்த வளையல் உள்பட ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகள் காணாமல் போனதைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இச்சம்பவம் கடந்த ஜனவரி மாதம் நடந்தது. இத்திருட்டு குறித்து வீட்டு வேலைக்கார பெண் சீமா காடே (40) மீது சந்தேகம் எழுந்தது. கடந்த 6 மாதங்களாக, திருடப்பட்டதாகக் கூறப்படும் நகையைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். நகை திரும்பக்கிடைக்காததால், மெரைன் டிரைவ் போலீஸில் ஆஷா பட்டேல் புகார் அளித்தார். விசாரணை நடத்திய போலீஸார், சீமாகாடே-வை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sarvam Maya: டெலுலுவின் துணையும், ஆன்மாக்கள் தரும் ஆறுதலும் | திரை தேவதைகள் 35
