World · 1 outlet covered this

புத்தகக் கண்காட்சியில் கழுகைப் போன்ற ரோபோட் அறிமுகம்..

How outlets told it

Polimer News1002d ago

புத்தகக் கண்காட்சியில் கழுகைப் போன்ற ரோபோட் அறிமுகம்..

Read at Polimer News
புத்தகக் கண்காட்சியில் கழுகைப் போன்ற ரோபோட் அறிமுகம்..
Photo: Polimer News

சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெறும் புத்தாக்கக் கண்காட்சியில், கழுகைப் போன்ற ரோபோட் அறிமுகப்படுத்தப்பட்டது. உண்மையான கழுகின் சிறகுகளால் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோட், செயற்கை நுண்ணறிவால் செயல்படக்கூடியது.600 கிராம் எடையுள்ள இந்த ரோபோட் கழுகு, அதிகபட்சம் விநாடிக்கு 10 மீட்டர் தூரம் பறக்கக்கூடியது என அதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். செயற்கையான பொருள்களைக் கொண்டு உருவாக்கப்படும் சிறகுகளுக்குப் பதிலாக, அதிகபட்ச காற்றியக்கச் செயல்திறனை எட்டுவதற்காக உண்மையான பறவையின் சிறகுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். உண்மையான சிறகுகள் பறக்கும்போது குறைவான சத்தத்தை ஏற்படுத்துவதால், சிக்கலான சூழல்களிலும்,  பறவைக் கூட்டங்களுக்குள் ஊடுருவி கண்காணிக்கும் பணிகளிலும் பயன்படுத்த முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.