Politics · 1 outlet covered this

பிரிக்ஸ் மாநாட்டில் இடம்பெறாத அசைவ உணவுகள்.. மறைமுகமாக விமர்சித்த ராகுல் காந்தி!

How outlets told it

Puthiya Thalaimurai10021h ago

பிரிக்ஸ் மாநாட்டில் இடம்பெறாத அசைவ உணவுகள்.. மறைமுகமாக விமர்சித்த ராகுல் காந்தி!

Read at Puthiya Thalaimurai
பிரிக்ஸ் மாநாட்டில் இடம்பெறாத அசைவ உணவுகள்.. மறைமுகமாக விமர்சித்த ராகுல் காந்தி!
Photo: Puthiya Thalaimurai

பிரிக்ஸ் மாநாட்டில் வெளிநாட்டு தலைவர்களுக்கு வழங்கப்பட்ட விருந்தில் அசைவ உணவு இடம்பெறாதது அரசியல் விவாதமாக மாறியுள்ளது. இதை குறிவைத்து, இந்தியர்களில் பெரும்பாலோர் அசைவம் உண்பவர்கள் என ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். இது மோடி அரசின் உணவு தேர்வை நோக்கிய விமர்சனமாக பார்க்கப்படுகிறது.

18ஆவது பிரிக்ஸ் மாநாடு சனிக்கிழமை அன்று புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் தொடங்கியது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் மசூத் பெசஸ்கியான் மற்றும் பிரேசில், எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிரிக்ஸின் கூட்டமைப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

BRICS Summit related interactions continue at Bharat Mandapam. pic.twitter.com/Hq3Q6xjvuN

— Narendra Modi (@narendramodi) September 13, 2026

இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டு தலைவர்களுக்கு பிரதமர் மோடி அளித்த விருந்தில், சைவ உணவுகளும் காய்கறிகள் சார்ந்த உணவுகளுமே அதிகம் இடம்பெற்றிருந்தன. அசைவ உணவுகளே இடம்பெறவில்லை என கூறப்பட்ட நிலையில், அதை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் ராகுல்காந்தி எக்ஸ் தளத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

For the record: 80% of Indians are non-vegetarian.

Indian non-vegetarian food is delicious. As are my sister's chole bhature. pic.twitter.com/8f6ziKjLan

— Rahul Gandhi (@RahulGandhi) September 13, 2026

ராகுல் காந்தியின் எக்ஸ் தளப் பதிவில், “80% இந்தியர்கள் அசைவ உணவு உண்பவர்கள்... இந்திய அசைவ உணவுகள் சுவையானவை. இது என் சகோதரி செய்த சோலா பட்டுரே (CHOLA BHATURE) ” என புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அவருடைய இந்த பதிவு பிரிக்ஸ் மாநாட்டில் உணவு குறித்து மறைமுகமாக விமர்சித்து இடப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.