1 outlet covered this

சேலத்தின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை... லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா செக் பண்ணிக்கோங்க..!

How outlets told it

News18 Tamil654d ago

சேலத்தின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை... லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா செக் பண்ணிக்கோங்க..!

Read at News18 Tamil
சேலத்தின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை... லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா செக் பண்ணிக்கோங்க..!
Photo: News18 Tamil

Trending:சற்றுமுன்பட்ஜெட் தொடர்Disco With KSDid You KnowOTT SpotShort NewsI3 With KSFollow Usfacebooktwitterinstagramyoutubeசேலத்தின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை... லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா செக் பண்ணிக்கோங்க..!Reported by:Srinivasan KPublished by:Muthu KathanLast Updated:Sep 10, 2026 2:15 PM ISTசேலம் மாவட்டத்தில் நாளை பல்வேறு துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.1/8சேலம் மாவட்டத்தில் மாதந்தோறும், துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் வகையில், தினந்தோறும் ஒருசில துணை மின்நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.2/8அதன்படி, நாளை (செப்.11) ஆடையூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான இருப்பாளி வாட்டர் ஒர்க்ஸ், பம்ப் ஹவுஸ், படைவெட்டி அம்மன், நெய்காரிவளவு, இருப்பாளி அம்மன் கோவில், தலைவாசல் கால்நடை, பம்ப் ஹவுஸ், புளியம்பட்டி பம்ப் ஆகிய பகுதிகளில் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.3/8சங்ககிரி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான படைவீடு, பச்சாம்பாளையம், சங்ககிரி ரயில்வே ஸ்டேஷன், சங்ககிரி மேற்கு, சன்னியாசிப்பட்டி, நாகிசெட்டிப்பட்டி, ஊஞ்சக்கொரை, தண்ணீர் பந்தல்பாளையம், சின்னாகவுண்டனுார், வெப்படை, சவுதாபுரம், பாதரை, அம்மன்கோவில், மக்கிரிபாளையம், முதலை மடையானுார், திருநகர் பைபாஸ் சிட்டி ஆகிய பகுதிகளில் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.4/8ஆடையூர் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான வண்ணாங்குட்டை, மேட்டுத்தெரு, பக்கநாடு, அடுவாப்பட்டி, ஆணைபள்ளம், குண்டுமலைக்காடு, கல்லுாரல்காடு, கோம்பைக்காடு, வேதகாளியம்மன் கோவில் காடு, ஒட்டப்பட்டி, குண்டானுார், செட்டிமாங்குறிச்சி, அம்மன் கோவில், இருப்பாளி, அக்கரைப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9:00 - 3:00 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.5/8தொப்பூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக (செப் 11) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை தொப்பூர், எருமப்பட்டி, எலத்தூர், தீவட்டிப்பட்டி, செக்காரப்பட்டி, சென்றாயரெட்டியூர், சோழியானூர், கம்மம்பட்டி, ஜோடுகுளி, கொண்ரெட்டியூர், குண்டுக்கல், வெள்ளார், தளவாய்பட்டி, மூக்கனூர் ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது.6/8ஜலகண்டாபுரம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செப்-11) ஆம் தேதி ஜலகண்டபுரம் நகர், கரட்டான்டிபட்டி, மேட்டுத்தெரு, சவுரியூர் பம்ப் ஹவுஸ், கடைவீதி, நந்தவனம், சேவியூர் பம்ப் ஹவுஸ், ஏரிக்கரை ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் காலை 9:00 மணி முதல் மதியம் 03:00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.7/8பூலாம்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை (செப்-11) பராமரிப்புப் பணிகளுக்காக பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், பில்லுக்குறிச்சி, வன்னியர் நகர் வளையசெட்டியூர், கள்ளுக்கடை, சித்தூர், வெடிக்காரம் பாளையம் குஞ்சாம்பாளையம், வெள்ளரிவெள்ளி, கல்லபாளையம் நெடுங்குளம், கோனேரிப்பட்டி, கல்வடங்கம், பூமணியூர் பொன்னம் பாளையம், புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 03 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.8/8எட்டிக்குட்டைமேடு துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செப்-11) கன்னந்தேரி, கச்சுப்பள்ளி, கொல்லப்பட்டி, ஏகாபுரம் தைலாம்பட்டி, ஆர். புதூர், கோரணம்பட்டி, கோணசமுத்திரம் எட்டிக்குட்டை மேடு, சின்னப்பம்பட்டி, புதுப்பாளையம் சமுத்திரம், தெப்பக்குட்டை, இடங்கணசாலை, எருமைப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (செப்.11) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட மின்தடை குறித்த தகவல்களை சேலம் கோட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.