World · 1 outlet covered this

போரை முடிவுக்கு கொண்டு வர உதவி: இந்தியா, சீனா தயாராக இருப்பதாக ரஷ்யா தகவல்

How outlets told it

Dinamalar6522h ago

போரை முடிவுக்கு கொண்டு வர உதவி: இந்தியா, சீனா தயாராக இருப்பதாக ரஷ்யா தகவல்

Read at Dinamalar
போரை முடிவுக்கு கொண்டு வர உதவி: இந்தியா, சீனா தயாராக இருப்பதாக ரஷ்யா தகவல்
Photo: Dinamalar

/செய்திகள்/உலகம்/ போரை முடிவுக்கு கொண்டு வர உதவி: இந்தியா, சீனா தயாராக இருப்பதாக ரஷ்யா தகவல்ADDED : செப் 13, 2026 05:28 PM ADDED : செப் 13, 2026 05:28 PM அ நிறம் | அளவுமாஸ்கோ: உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உதவி செய்ய தயாராக உள்ளதாக பிரதமர் மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் தெரிவித்துள்ளனர் எனக்கூறியுள்ள ரஷ்யா, அதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் கடந்த பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி செய்தார். ஆனால், ஒன்று கூட பலன் அளிக்கவில்லை. ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதலில் அமெரிக்கா கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், டில்லியில் நடந்த பிரிக்ஸ் அமைப்பு மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்களுடன் பிரதமர் மோடி தனித்தனியே ஆலோசனை நடத்தியிருந்தார். இந்நிலையில், மாஸ்கோவில் நிருபர்களிடம் அதிபரின் மாளிகையான கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் நிருபர்களிடம் கூறியதாவது: டில்லியில் நடந்த இரு தரப்பு சந்திப்பின் போது உக்ரைன் விவகாரத்தில் நல்ல தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக, உதவி செய்ய தயாராக உள்ளதாக அதிபர் ஜின்பிங்கும், பிரதமர் மோடியும் தெரிவித்துள்ளனர். அதற்கு புடின் வரவேற்பு தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.