Religion and culture · 1 outlet covered this

முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து 9,200 கனஅடியாக உயர்வு

How outlets told it

Daily Thanthi993d ago

முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து 9,200 கனஅடியாக உயர்வு

Read at Daily Thanthi
முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து 9,200 கனஅடியாக உயர்வு
Photo: Daily Thanthi

திருச்சி, முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து 9,200 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால் அப்பகுதி கடல் போல் காட்சி அளிக்கிறது. காவிரியில் தண்ணீர் திறப்புமேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். ஆனால் கடந்த ஜூன் மாதம் மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. பின்னர் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் கர்நாடகம் தமிழகத்துக்கு சிறிதளவு தண்ணீர் திறந்துவிட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 1-ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து சம்பா சாகுபடிக்கு முதல்-அமைச்சர் விஜய் தண்ணீர் திறந்து விட்டார். முதல் கட்டமாக வினாடிக்கு 7,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கடந்த 3-ந்தேதி மாயனூர் கதவணைக்கு வந்தது. நீர்வரத்து அதிகரிப்புபின்னர் மாயனூர் கதவணையில் இருந்து காவிரியில் 2,050 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கடந்த 4-ந்தேதி காலை முக்கொம்பு மேலணைக்கு வந்தடைந்தது. ஏற்கனவே முக்கொம்பு மேலணைக்கு 1,500 கன அடி நீர் வந்த நிலையில், நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. தற்போது முக்கொம்புக்கு நீர்வரத்து 9,200 கன அடியாக உயர்ந்துள்ளது. இந்த நீரும் காவிரியில் முழுமையாக திறந்து விடப்பட்டது. தண்ணீர் வரத்தால் முக்கொம்பு மேலணை கடல் போல் காட்சி அளித்தது.