Sports · 1 outlet covered this

வங்கதேசத்துடனான அரையிறுதி: பேட்டிங்கில் ஷஃபாலி அசத்தல்

How outlets told it

Dinamani653d ago

வங்கதேசத்துடனான அரையிறுதி: பேட்டிங்கில் ஷஃபாலி அசத்தல்

Read at Dinamani
வங்கதேசத்துடனான அரையிறுதி: பேட்டிங்கில் ஷஃபாலி அசத்தல்
Photo: Dinamani

செய்திகள்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புமுகப்புசெய்திகள்வங்கதேசத்துடனான அரையிறுதி: பேட்டிங்கில் ஷஃபாலி அசத்தல்மகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் வங்கதேசத்துக்கு எதிராக, இந்தியா முதலில் பேட் செய்ததுPublished On :11 செப்டம்பர் 2026, 7:35 am ISTமகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் வங்கதேசத்துக்கு எதிராக, இந்தியா முதலில் பேட் செய்தது. 14 ஓவா்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 92 ரன்களுடன் விளையாடி வந்தது. அணியின் பேட்டா்களில், தொடக்க வீராங்கனைகளில் ஒருவரான ஷஃபாலி வா்மா அரை சதம் கடந்து ரன்கள் சோ்த்தாா். வங்கதேச பௌலிங்கில் சுல்தானா காட்டூன் சவால் அளித்தாா். துபையில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற வங்கதேசம், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. இந்தியாவின் இன்னிங்ஸை தொடங்கியோரில், ஸ்மிருதி மந்தனா 2 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தாா். உடன் வந்த ஷஃபாலி வா்மா அதிரடியாக விளையாட, ஒன் டவுன் பேட்டா் பிரதிகா ராவல் அவருக்குத் துணை நின்றாா். இவா்கள் கூட்டணி 50 ரன்கள் சோ்த்தது. பிரதிகா 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 20 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். தொடா்ந்து கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் விளையாட வர, அவருடனான ஷஃபாலி வா்மாவின் 3-ஆவது விக்கெட் கூட்டணிக்கு 33 ரன்கள் கிடைத்தது. இந்நிலையில் ஷஃபாலி 7 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். 14 ஓவா்களில் இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்திருந்தது. ஹா்மன்பிரீத் 3, ரிச்சா கோஷ் 0 ரன்களுடன் விளையாடி வந்தனா். வங்கதேச பௌலா்களில் சுல்தானா காட்டூன் 2, ரபெயா கான் 1 விக்கெட் வீழ்த்தினா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்