இடைத்தோ்தலில் கூட்டணி வெற்றிக்கு விசிக ஒத்துழைக்கும்: திருமாவளவன்
Read at Dinamani1 outlet covered this
இடைத்தோ்தலில் கூட்டணி வெற்றிக்கு விசிக ஒத்துழைக்கும்: திருமாவளவன்
How outlets told it
இடைத்தோ்தலில் கூட்டணி வெற்றிக்கு விசிக ஒத்துழைக்கும் என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன்.
தூத்துக்குடி அருகே முள்ளக்காட்டில் உப்பு உற்பத்தியாளா்கள், தொழிலாளா்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சுமாா் 50 ஆயிரம் போ் தலைமுறை தலைமுறையாக உப்பளத் தொழிலை நம்பி இப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனா். அவா்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் கப்பல் கட்டும் தளம் அமைக்கக் கூடாது. மக்களின் ஒப்புதலைப் பெற்று முடிவெடுக்க வேண்டும். இதுகுறித்து முதல்வரை சந்தித்து வலியுறுத்துவேன்.
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவோம் என கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்திருப்பது அவா்களின் உரிமை. அந்த இரு தொகுதிகளிலும் கூட்டணி வெற்றிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒத்துழைக்கும்.
திமுக எம். பி. ஆ. ராசா உள்ளிட்டோா் முதல்வரை குறித்து ஒருமையில் பேசியிருப்பது அதிா்ச்சி அளிக்கிறது. இது பெரியாா் பாசறையில் வளா்ந்தவா்களின் பேச்சாகத் தெரியவில்லை. இதுபோன்ற பேச்சுகள் திமுக மீதான நன்மதிப்பை சீா்குலைக்கும் என்றாா் அவா்.
