Sports · 1 outlet covered this

தோல்வியிலும் ஆட்ட நாயகி விருது வென்ற பாகிஸ்தான் கேப்டன் ஃபாத்திமா சனா!

How outlets told it

Dinamani652d ago

தோல்வியிலும் ஆட்ட நாயகி விருது வென்ற பாகிஸ்தான் கேப்டன் ஃபாத்திமா சனா!

Read at Dinamani
தோல்வியிலும் ஆட்ட நாயகி விருது வென்ற பாகிஸ்தான் கேப்டன் ஃபாத்திமா சனா!
Photo: Dinamani

செய்திகள்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புமுகப்புகிரிக்கெட்தோல்வியிலும் ஆட்ட நாயகி விருது வென்ற பாகிஸ்தான் கேப்டன் ஃபாத்திமா சனா!மகளிருக்கான ஆசிய கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆட்ட நாயகி வென்ற பாகிஸ்தான் கேப்டன் ஃபாத்திமா சனா குறித்து... ஃபாத்திமா சனா (கோப்புப் படம்) - AFPPublished On :12 செப்டம்பர் 2026, 2:51 pm ISTமகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்டின் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் ஃபாத்திமா சனா ஆட்ட நாயகி வென்றார். அந்த அணி தோல்வியுற்ற போதிலும் அவரது ஆட்டம் பலரையும் வியக்க வைத்தது. நேற்றிரவு துபையில் நடந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 130/5 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஃபாத்திமா சனா 36 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார். அதில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடித்தார். அடுத்து பேட்டிங் செய்த இலங்கை அணி 18.4 ஓவர்களில் 134/6 ரன்கள் எடுத்து வென்றது. இதில் அதிகபட்சமாக ஹர்சிதா சமரவிக்ரமா 36 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் சார்பில் பந்துவீச்சில் கேப்டன் ஃபாதிமா சனா 3.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இருப்பினும் அந்த அணி தோல்வியடைந்தது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் தனியாளாக அசத்திய ஃபாத்திமா சனா ஆட்ட நாயகி விருது வென்றார். பல போட்டிகளில் அவர் மட்டுமே நன்றாக விளையாடி அணி தோல்வியடைவது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. SummaryPakistan captain Fatima Sana wins Player of the Match award despite the loss!பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்