தமிழ்நாட்டுக்கு புதிதாக தொழில் முதலீடுகளை ஈர்க்கவே லண்டன் பயணம் என்று முதலமைச்சர் விஜய் அறிவிப்பு..!
Read at Polimer NewsWorld · 1 outlet covered this
தமிழ்நாட்டுக்கு புதிதாக தொழில் முதலீடுகளை ஈர்க்கவே லண்டன் பயணம் என்று முதலமைச்சர் விஜய் அறிவிப்பு..!
How outlets told it

தமிழ்நாட்டுக்கு புதிதாக தொழில் முதலீடுகளை ஈர்க்கவே லண்டன் பயணம் என்று முதலமைச்சர் விஜய் அறிவிப்பு. ஏற்கனவே உள்ள நிறுவனங்களை விரிவுபடுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்க இருப்பதாக விளக்கம். வாகனங்கள், மின்னணுவியல், உலகளாவிய திறன் மையங்கள் துறைகளில் புதிய முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் விஜய் இங்கிலாந்து பயணம். தமிழ்நாட்டில் உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வாய்ப்புகள் ஏற்படும் என்றும் தமிழக அரசு விளக்கம். லண்டனில் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டை பார்வையிட முதலமைச்சர் விஜய் திட்டம். தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் முடிவு. லண்டன் சில்வர்ஸ்டோன் சர்கியூட்டில் அஜித் பங்கேற்கும் லீ மேன்ஸ் கப் கார் ரேசை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய். கார் பந்தயத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டியாளர்களை உற்சாகப்படுத்துவார் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு.
