1910-ல் பல்லாவரத்தில் பறந்த முதல் விமானம்... சென்னையின் 116 ஆண்டுகால ஏவியேஷன் வரலாறு..!
Read at News18 TamilReligion and culture · 1 outlet covered this
1910-ல் பல்லாவரத்தில் பறந்த முதல் விமானம்... சென்னையின் 116 ஆண்டுகால ஏவியேஷன் வரலாறு..!
How outlets told it

Trending:சற்றுமுன்Disco With KSDid You KnowOTT SpotDecodeShort NewsI3 With KSFollow UsfacebooktwitterinstagramyoutubeReported by:Sundaravadivel EPublished by:Muthu KathanLast Updated:Sep 12, 2026 7:26 PM IST1932 அக்டோபர் 15-ல் டாடா விமானத் தபால் சேவையின் ஒரு பகுதியாக ஜே. ஆர். டி. டாடா கராச்சியிலிருந்து பம்பாய் வரை விமானத்தை இயக்கினார்.1/5இன்று சென்னை விமான நிலையத்திலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான விமானங்கள் புறப்படுகின்றன. ஆனால், சென்னையின் விமான வரலாறு விமான நிலையத்தில் தொடங்கவில்லை; பல்லாவரத்திலும் தீவுத்திடலிலும் தொடங்கியது. 1910-ல் மெட்ராஸில் விமானம் ஒன்று உருவாக்கப்பட்டு பறக்கவிடப்பட்டது. இதன் பின்னணியில் இத்தாலியைச் சேர்ந்த ஜியாகோமோ டி’ஏஞ்சலிஸ் இருந்தார். 1909-ல் லூயி பிளேரியோ ஆங்கிலக் கால்வாயைக் கடந்த செய்தியால் ஈர்க்கப்பட்ட அவர், மெட்ராஸிலேயே விமானம் உருவாக்க முயன்றார்.2/5அதன் பின்னர் மெட்ராஸிலேயே இரட்டை இறக்கை விமானத்தை உருவாக்க டி’ஏஞ்சலிஸ் முயன்றார். அன்றைய புகழ்பெற்ற சிம்ப்சன்ஸ் நிறுவனத்தின் உதவியுடன், சாமுவேல் ஜான் கிரீன் உள்ளிட்ட தொழில்நுட்ப வல்லுநர்களின் பங்களிப்பில் விமானம் உருவானது. 1910-ஆம் ஆண்டு மார்ச் 10-ஆம் தேதி பல்லாவரத்தில் விமானம் சோதனை செய்யப்பட்டது.3/5இதற்குப் பிறகு, 1910-ஆம் ஆண்டு மார்ச் 26-ஆம் தேதி மெட்ராஸ் தீவுத்திடலில் பொதுமக்கள் முன்னிலையில் விமானம் பறக்கவிடப்பட்டது. இதைக் காண ஏராளமான மக்கள் திரண்டனர். அப்போது வாசன் என்ற சிறுவன் விமானத்தில் பயணியாகச் சென்றதாகவும் வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன. மெட்ராஸிலேயே உருவாக்கப்பட்ட விமானம் பொதுமக்கள் முன்னிலையில் பறந்தது, அந்நகரின் ஆரம்பகால விமான வரலாற்றில் முக்கிய நிகழ்வாக அமைந்தது.4/5மெட்ராஸின் விமான வரலாறு அத்துடன் முடிந்துவிடவில்லை. 1914-ல் பொறியாளர் ஜே. டபிள்யூ. மேட்லி, தான் உருவாக்கிய விமானத்தில் ரெட் ஹில்ஸ் நீர்த்தேக்கத்தை வானிலிருந்து ஆய்வு செய்து, புகைப்படங்களும் எடுத்தார். 1915-ல் கராச்சி–மெட்ராஸ் இடையே தபால் விமான சேவை தொடங்கியது. 1930-ல் Madras Flying Club தொடங்கியதுடன், விமானத் தளமும் செயல்பாட்டுக்கு வந்தது. 1932 அக்டோபர் 15-ல் டாடா விமானத் தபால் சேவையின் ஒரு பகுதியாக ஜே. ஆர். டி. டாடா கராச்சியிலிருந்து பம்பாய் வரை விமானத்தை இயக்கினார்.5/5விமானி நெவில் வின்சென்ட் மெட்ராஸ் நோக்கிய பயணத்தைத் தொடர்ந்தார். 1936-ல் கொழும்புடன் தபால் விமானத் தொடர்பு தொடங்கியது; பின்னர் பயணிகள் சேவையும் விரிவடைந்தது. இரண்டாம் உலகப்போரின்போது மெட்ராஸ் விமானத் தளம் ராணுவப் பயன்பாட்டுக்கு வந்தது. 1952-ல் சிவில் ஏவியேஷன் துறை பொறுப்பேற்றது. 1954-ல் மீனம்பாக்கத்தில் புதிய பயணிகள் முனையம் அமைக்கப்பட்டது. பல்லாவரத்தில் தொடங்கிய விமானப் பயணம், இன்று சென்னை சர்வதேச விமான நிலையம் வரை வளர்ந்துள்ளது.
