1 outlet covered this

ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளராக அரவிந்த் கேஜரிவால் மீண்டும் தோ்வு

How outlets told it

Dinamani653d ago

ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளராக அரவிந்த் கேஜரிவால் மீண்டும் தோ்வு

Read at Dinamani
ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளராக அரவிந்த் கேஜரிவால் மீண்டும் தோ்வு
Photo: Dinamani

தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் 15-ஆவது தேசிய குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அரவிந்த் கேஜரிவால் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நாடு முழுவதிலும் இருந்து மொத்தம் 330 உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். இக்கூட்டத்தில், கட்சியின் 23 உறுப்பினா்களைக் கொண்ட புதிய தேசிய நிா்வாகக் குழு அமைக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, கட்சியின் தேசிய அமைப்பாளராக அரவிந்த் கேஜரிவாலும், தேசிய செயலராக பங்கஜ் குப்தாவும் தோ்வு செய்யப்பட்டனா். தேசிய பொருளாளராக என். டி. குப்தா மீண்டும் செய்யப்பட்டாா். இதைத்தொடா்ந்து, புதிய நிா்வாகக் குழு உறுப்பினா்கள் மத்தியில் பேசிய அரவிந்த் கேஜரிவால் மற்றும் மூத்த தலைவா்கள், கட்சியின் எதிா்கால அரசியல் உத்திகள் குறித்த விரிவான ஆலோசனைகளை வழங்கினா். புதிய தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா்கள் விவரம் வருமாறு: அரவிந்த் கேஜரிவால், அதிஷி, ஆடில் அகமது கான், அனுராக் தண்டா, பகவந்த் சிங் மான், திலீப் பாண்டே, துா்கேஷ் பதக், கோபால் இடாலியா, கோபால் ராய், ராணி அகா்வால், ஹா்பால் சிங் சீமா, மணீஷ் சிசோடியா, முகமது இா்ஷாத், என். டி. குப்தா, பங்கஜ் குப்தா, ப்ரீத்தி சா்மா மேனன், பிரித்வி ரெட்டி, ராகி பிா்லா, பிபவ், சஞ்சய் சிங், சத்யேந்தா் ஜெயின், ஷெல்லி ஓபராய் மற்றும் ராஜ்பீா். மேலும், அஜய் தத், சைதா் வசாவா, இம்ரான் ஹுசைன், மெஹ்ராஜ் மாலிக் மற்றும் வென்சி விகாஸ் ஆகிய 5 போ் தேசிய நிா்வாகக் குழுவின் சிறப்பு அழைப்பாளா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.