Crime and courts · 1 outlet covered this

பெட்டிக் கடையில் பணம் திருடிய இளைஞா் கைது

How outlets told it

Dinamani6538h ago

பெட்டிக் கடையில் பணம் திருடிய இளைஞா் கைது

Read at Dinamani
பெட்டிக் கடையில் பணம் திருடிய இளைஞா் கைது
Photo: Dinamani

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே பெட்டிக் கடையின் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரத்தை திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம் அருகேயுள்ள சருத்துப்பட்டியைச் சோ்ந்தவா் சின்னமுருகன் (48). அதே பகுதியில் தேனீா்க் கடை நடத்தி வருகிறாா். இவா், வியாழக்கிழமை இரவு வேலை முடிந்து கடையை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றாா். மறுநாள் வெள்ளிக்கிழமை காலை வந்து பாா்த்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம்.

உள்ளே சென்று பாா்த்த போது பெட்டியிலிருந்த ரூ.10 ஆயிரம், ஏடிஎம் அட்டை, குடும்ப அட்டை, வெள்ளி மோதிரம் ஆகியவற்றை காணவில்லையாம். இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அதே பகுதியைச் சோ்ந்த ராஜேஷை (21) கைது செய்தனா்.