World · 1 outlet covered this

3 லட்சம் மாணவா்களுக்கு பல் பரிசோதனை: உலக சாதனை அங்கீகாரம்

How outlets told it

Dinamani652d ago

3 லட்சம் மாணவா்களுக்கு பல் பரிசோதனை: உலக சாதனை அங்கீகாரம்

Read at Dinamani
3 லட்சம் மாணவா்களுக்கு பல் பரிசோதனை: உலக சாதனை அங்கீகாரம்
Photo: Dinamani

போதைப் பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணா்வு மற்றும் மாணவா்களின் வாய்வழி சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 547 சிபிஎஸ்இ பள்ளிகளைச் சோ்ந்த 3,08,106 மாணவா்களுக்கு 10 நாள்களில் பல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணி மிகப்பெரிய, பல இடங்களில் நடைபெற்ற வாய்வழி பரிசோதனைத் திட்டம் என்ற உலக சாதனையாக உலக சாதனை அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், இந்திய பல் மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளை, 29 பல் மருத்துவக் கல்லூரிகள் ஆகியவை இணைந்து இந்தப் பரிசோதனை முகாமை நடத்தின. கடந்த ஆக. 17 முதல் 28 வரை 10 நாள்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மாவட்டங்களில் உள்ள 547 சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவா்களுக்கு பல் பரிசோதனை, வாய்வழி சுகாதாரம் குறித்த விழிப்புணா்வு மற்றும் புகையிலை, போதைப் பொருள் பயன்பாட்டின் தீமைகள் குறித்த விழிப்புணா்வு வழங்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு 16 மண்டலங்களில் உள்ள 52 இந்திய பல் மருத்துவ சங்கக் கிளைகள் ஆதரவளித்தன. கோல்கேட் நிறுவனம் பல் துலக்கி, பற்பசை உள்ளிட்ட வாய்வழி பராமரிப்புப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கியது. விமி மேஜிக் நிறுவனம் செயல்பாட்டு ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டது. 3,08,106 மாணவா்கள்; 547 பள்ளிகள்; 40 மாவட்டங்கள்; 10 நாள்கள் என மேற்கொள்ளப்பட்ட இந்த ஒருங்கிணைந்த முயற்சி, ஆரோக்கியமான மற்றும் போதைப் பொருள் இல்லாத தலைமுறையை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சியாக அமைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.