Crime and courts · 1 outlet covered this

மாரிதாஸ் கைது நடவடிக்கை அவசியமா? - சவுக்கு சங்கர் கேள்வி

How outlets told it

Daily Thanthi9997d ago

மாரிதாஸ் கைது நடவடிக்கை அவசியமா? - சவுக்கு சங்கர் கேள்வி

Read at Daily Thanthi
மாரிதாஸ் கைது நடவடிக்கை அவசியமா? - சவுக்கு சங்கர் கேள்வி
Photo: Daily Thanthi

Published on: 08 Jun 2026, 11:45 amசென்னை, பிரபல யூடியூபர் மாரிதாஸ். இவர் முதல்-அமைச்சர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அமைச்சர்கள் பலரை விமர்சித்து சமூக வளைதலங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்டு இருந்தார். இந்த பதிவுகள் தொடர்பாக யூடியூபர் மாரிதாசை போலீசார் இன்று காலை அவரின் வீட்டில் வைத்து கைது செய்தனர். சவுக்கு சங்கர் கண்டனம் மாரிதாசின் கைதுக்கு பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், மாரிதாஸ் பேசியதில், எழுதியதில் பிழை இருக்கலாம். சட்ட மீறல் இருக்கலாம். அதற்காக வழக்கு கூட பதிவு செய்யுங்கள். ஆனால் கைது அவசியமா என்பதுதான் கேள்வி. குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், தப்பி ஓடி விடுவார். தடயங்களை அழித்து விடுவார். சாட்சிகளை கலைத்து விடுவார் என்ற சூழலில் மட்டுமே கைது செய்யப்பட வேண்டும் என்று பல உச்சநீதிமன்ற தீர்ப்புகள் கூறுகின்றன. அவற்றையெல்லாம் மதிக்காமல், அரசை கடுமையாக விமர்சிக்கும் ஒருவரை இப்படி அதிகாலையில் இப்படி கைது செய்தால் உங்களுக்கும் திமுகவுக்கும் என்ன வேறுபாடு ?உங்களிடம் நற்பெயர் ஈட்ட வேண்டும் என்று உங்களை தவறாக வழிநடத்தும் பலர் உங்களோடு இருக்கிறார்கள். கவனமாக இருங்கள் முதல்வரே. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.