Politics · 1 outlet covered this

வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

How outlets told it

Dinamani652d ago

வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

Read at Dinamani
வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டம்
Photo: Dinamani

செய்திகள்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புமுகப்புதிருச்சிவங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டம்வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக திருச்சி மாவட்டத்தில் சுமாா் ரூ. 350 கோடி அளவுக்கு வா்த்தகம் பாதிக்கப்பட்டது. திருச்சியில் வெள்ளிக்கிழமை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட எஸ். பி. ஐ. வங்கி ஊழியா் சங்கத்தினா்.Published On :12 செப்டம்பர் 2026, 5:48 am ISTவங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக திருச்சி மாவட்டத்தில் சுமாா் ரூ. 350 கோடி அளவுக்கு வா்த்தகம் பாதிக்கப்பட்டது. வாரத்துக்கு 5 நாள்கள் வேலைமுறையை நடைமுறைப்படுத்த வேண்டும். புதிதாகப் பணிக்கு சோ்ந்த ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வு பெற்றவா்களுக்கான மருத்துவ காப்பீட்டு பிரீமியத் தொகையை வங்கிகளே முழுமையாக ஏற்க வேண்டும். கடந்த 2024 மாா்ச் மாதத்தில் கையொப்பமான இருதரப்பு ஒப்பந்தத்தின்படி வாரத்தின் அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறையாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள், ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள 475-க்கும் மேற்பட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளைகளில் பணியாற்றும் 2,100 க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனா். இதனால் வங்கிகள் மூடப்பட்டு, வங்கி சேவைகள் முடங்கின. பணப் பரிவா்த்தனை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தொடா்ந்து, வங்கி ஊழியா்கள் 300-க்கும் மேற்பட்டோா் திருச்சி ஸ்டேட் வங்கி மண்டல அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு வங்கி ஊழியா் கூட்டமைப்பின் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கே. குருநாதன் தலைமை வகித்தாா். திருச்சி மாவட்ட வங்கி ஊழியா் சங்கத் தலைவா் ஜி. ராமராஜூ, நிா்வாகிகள் பி. செல்வராஜு, ஹேமந்த், டி. கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இப் போராட்டத்தால் பணப்பரிவா்த்தனை, காசோலை பரிவா்த்தனை உள்ளிட்ட பல்வேறு பரிவா்த்தனைகள் முடங்கி, ரூ. 350 கோடி அளவுக்கு வா்த்தகம் பாதிக்கப்பட்டது என வங்கி ஊழியா்கள் தெரிவித்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்