Sports · 1 outlet covered this

தாராபுரத்தில் இந்திய கம்யூ., மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் - இடதுசாரிகள் தனித்து போட்டி

How outlets told it

The Hindu Tamil658h ago

தாராபுரத்தில் இந்திய கம்யூ., மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் - இடதுசாரிகள் தனித்து போட்டி

Read at The Hindu Tamil
தாராபுரத்தில் இந்திய கம்யூ., மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் - இடதுசாரிகள் தனித்து போட்டி
Photo: The Hindu Tamil

சென்னை/திருச்சி: ​தா​ராபுரம், மது​ராந்​தகம் இடைத்​தேர்​தலில் இடது​சா​ரி​கள் கூட்​டணி தனித்து களம் காண்​ப​தாக கம்யூனிஸ்ட் கட்​சி​யின் தலை​வர்​கள் அறி​வித்​துள்​ளனர்.

கடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் எந்​தவொரு கட்​சிக்​கும் தனிப் பெரும்​பான்மை கிடைக்​காத நிலை​யில், காங்​கிரஸ், விசிக, இடது​சா​ரி​கள் உள்​ளிட்ட கட்​சிகளின் ஆதர​வுடன் தவெக ஆட்சி அமைத்​தது.

தொடர்ந்து காங்​கிரஸ், விசிக, ஐயுஎம்​எல் கட்​சிகள் அமைச்​சர​வை​யில் இடம்​பெற்ற நிலை​யில், கொள்கை அடிப்​படை​யில் அமைச்​சர​வை​யிலோ அல்​லது கூட்​ட​ணி​களிலோஇடது​சா​ரி​கள் இணை​யாமல், வெளி​யில் இருந்து மட்​டுமே ஆதரவு அளித்து வந்​தனர். கூட்​ட​ணிக்கு அழைத்​தும் செல்​ல​வில்​லை.

இதற்​கிடையே, முதல்​வர் போட்​டி​யிட்ட இரு தொகு​தி​களில் ஒரு தொகு​தியை ராஜி​னாமா செய்​தது, அதி​முக எம்​எல்​ஏக்​கள் ராஜி​னாமா செய்​து​விட்டு ஆளுங்​கட்​சி​யில் இணைந்​தது என தமிழக சட்​டப்​பேர​வை​யில் 7 தொகு​தி​கள் காலி​யாகின.

இதில் 5 தொகு​தி​களுக்கு எதி​ராக வழக்கு தொடரப்​பட்​டு, இடைத்​தேர்​தல் நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், தாராபுரம் மற்​றும் மது​ராந்​தகம் தொகு​தி​களுக்கு மட்​டும் தற்​போது தேர்​தல் (அக்​.6) அறிவிக்​கப்​பட்​டது.

பிர​தான கட்​சிகளான தவெக, திமுக, அதி​முக ஆகியவை வேட்​பாளர்​களை அறி​வித்​துள்ள நிலை​யில், கம்​யூனிஸ்ட் கட்​சிகள் இடைத்​தேர்​தலில் யாருக்​கு ஆதரவு அளிக்​கும் என்​பது கேள்விக்​குறி​யாக இருந்து வந்​தது.

இந்​நிலை​யில் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் மு. வீர​பாண்​டியன் தலை​மை​யில் மாநில நிர்​வாகக் குழு கூட்​டம், சென்னை தி. நகரிலும், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் பெ. சண்​முகம் தலை​மை​யில் மாநிலக் குழு கூட்​டம், திருச்சி​யிலும் நேற்று நடை​பெற்​றன.

கூட்​டத்​தின் முடி​வில் எந்த கூட்​டணி வேட்​பாளர்​களுக்கும் ஆதரவு அளிக்​காமல், இடைத்​தேர்​தலில் இடது​சாரி கட்​சிகள் தனித்​துப் போட்​டி​யிட முடி​வெடுத்​துள்​ள​தாக அறி​வித்​துள்​ளன.

இதுதொடர்​பாக செய்​தி​யாளர்​களிடம் மு. வீர​பாண்​டியன் நேற்று கூறுகை​யில், “இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி தற்​போது எந்த கூட்​ட​ணி​யிலும் இல்​லை. பாஜக​வின் மறை​முக ஆட்சி வந்​து​விடக் கூடாது என்​ப​தற்​காகவே தவெக அரசுக்கு வெளி​யில் இருந்து ஆதரவு அளித்தோம்.

தற்​போது அறிவிக்​கப்​பட்​டுள்ள இடைத்​தேர்​தல் மக்​கள் மீது திணிக்​கப்​பட்ட ஒன்​று.

இளைஞர்​களை நம்​பு​கிறோம்

எனவே, எந்​தக் கூட்​ட​ணி​யிலும் இணை​யாமல் தேர்​தலை இடது​சா​ரி​கள் தனித்து எதிர்​கொள்ள முடிவு செய்​துள்​ளோம்.

தாராபுரத்​தில் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யும், மது​ராந்​தகத்​தில் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யும் போட்​டி​யிடும். வேட்​பாளர்​கள் சென்​னை​யில் நாளை (செப்​.15) முறைப்​படி அறி​முகப்​படுத்​தப்​படு​வர். அதே​நேரம் அரசுக்​கான எங்​களது வெளி ஆதரவு தொடரும்.

இன்​றைய சூழலில் மாணவர்​கள், இளைஞர்​கள் மத்​தி​யில் இடது​சா​ரி​களுக்கு ஒரு இடம் இருக்​கிறது என்று திட​மாக நம்​பு​கிறோம். அவர்​கள் நிச்​ச​யம் எங்​களுக்கு வாக்​களிப்​பார்​கள்.” என்​றார்.

தொடர்ந்து பெ. சண்​முகம் தெரிவிக்​கை​யில், “வெற்​றி​பெற்ற 20 நாட்​களி​லேயே அதி​முக எம்​எல்​ஏக்​கள் பதவி விலகி ஆளுங்​கட்​சி​யில் இணைந்​தது ஆரோக்​கியமற்ற அரசி​யலுக்கு வழி​வகுக்​கும் செய​லாகும்.

தவெக ஆட்​சி​யமைத்து 120 நாட்​கள் நிறைவடைந்​துள்ள நிலை​யில், சட்​டப்​பேர​வை​யில் நிகழ்ந்த நிகழ்​வு​கள், பட்​ஜெட்​டில் நவீன தாராளமய பொருளா​தா​ரக் கொள்​கைகளை அமல்​படுத்​தக்​கூடிய அம்​சங்​கள் இடம்​பெற்​றிருந்​தது உள்​ளிட்ட பல்​வேறு அரசு நடவடிக்​கை​களில் நாங்​கள் மாறு​பட்​டிருக்​கிறோம்.

அதுகுறித்து வலி​யுறுத்​தி​யும் பலவற்றை அவர்​கள் ஏற்​றுக்​கொள்​ள​வில்​லை.

எந்த அணியிலும் இல்​லை

அதே​போல் தி​முக, அதி​முக என எந்த அணி​களி​லும் நாங்​கள் இல்​லை. ஆகவே, இந்த இடைத்​தேர்​தலில் இடது​சா​ரி​களின் சார்​பில் வேட்​பாளர்​களை நிறுத்​து​வது என தீர்​மானித்​து இருக்​கிறோம்​.” என்று தெரிவித்​தார்​.

ஆளுநருடன் பேரவைத் தலைவர் சந்திப்பு: பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு குறித்து கலந்துரையாடினர்