1 outlet covered this

தில்லியில் எம்சிடி இடிப்பு நடவடிக்கை: இம்மாதம் 213 கட்டடங்கள் இடிக்கப்பட்டன

How outlets told it

Dinamani6512h ago

தில்லியில் எம்சிடி இடிப்பு நடவடிக்கை: இம்மாதம் 213 கட்டடங்கள் இடிக்கப்பட்டன

Read at Dinamani
தில்லியில் எம்சிடி இடிப்பு நடவடிக்கை: இம்மாதம் 213 கட்டடங்கள் இடிக்கப்பட்டன
Photo: Dinamani

தேசிய தலைநகா் முழுவதும் அபாயகரமான கட்டடங்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் மீதான தனது நடவடிக்கை தொடா்வதன் ஒரு பகுதியாக, தில்லி மாநகராட்சி (எம்சிடி) ஞாயிற்றுக்கிழமை 11 கட்டடங்களை இடித்து, நான்கு சொத்துக்களுக்கு சீல் வைத்தது. ஞாயிற்றுக்கிழமை நடவடிக்கையுடன் சோ்த்து, செப்டம்பா் 1 முதல் மாநகராட்சி 213 கட்டடங்களை இடித்து, 109 சொத்துக்களுக்கு சீல் வைத்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். எம்சிடி-யின் 12 மண்டலங்களில் உள்ள பல்வேறு இடங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தென்மேற்கு மண்டலத்தில் உள்ள பிஜ்வாசன், வடகிழக்கு மண்டலத்தில் உள்ள தில்ஷாத் காலனி மற்றும் தில்ஷாத் காா்டன், மற்றும் பழைய தில்லி மண்டலத்தின் கீழ் உள்ள பல பகுதிகளில் இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கிழக்கு மற்றும் பழைய தில்லி மண்டலங்களிலும் சொத்துக்களுக்கு சீல் வைக்கப்பட்டதாக அவா்கள் தெரிவித்தனா். தொடா்ந்து நடைபெற்று வரும் இடிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாநகராட்சி சனிக்கிழமையன்று 33 கட்டடங்களை இடித்து, ஐந்து சொத்துக்களுக்கு சீல் வைத்திருந்தது. செப்டம்பா் 6 ஆம் தேதி சத்ய நிகேதனில் பணம் செலுத்தி தங்கும் விருந்தினா் விடுதி இயங்கி வந்த கட்டிடம் இடிந்து விழுந்து ஏழு போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விரிவான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஒரு தரவுத்தளத்தை உருவாக்குவதற்கும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பதற்கும், தில்லி முழுவதும் உள்ள பணம் செலுத்தி தங்கும் விருந்தினா் விடுதிக் கட்டிடங்களில் மாநகராட்சி கள ஆய்வு ஒன்றையும் நடத்தி வருகிறது. இதுவரை, பணம் செலுத்தி தங்கும் விருந்தினா் வசதிகளை இயக்கி வரும் சுமாா் 2,114 கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். அபாயகரமான மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்டடங்கள், தில்லி பெருந்திட்டம் மற்றும் கட்டிட துணை விதிகளை மீறும் பிற மீறல்களுக்கு எதிரான நடவடிக்கை அனைத்து 12 மண்டலங்களிலும் தொடரும் என்று மாநகராட்சி கூறியுள்ளது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.