கோவை மாவட்ட பள்ளிகளில் காலை உணவுத் திட்ட விரிவாக்கப் பணி ஆய்வு
Read at DinamaniEducation and jobs · 2 outlets covered this
கோவை மாவட்ட பள்ளிகளில் காலை உணவுத் திட்ட விரிவாக்கப் பணி ஆய்வு
How outlets told it
பள்ளிகளில் காலை உணவு திட்டத்துக்கான பராமரிப்பு பணிகளை உள்ளாட்சி நிதியிலிருந்து மேற்கொள்ள உத்தரவு
Read at The Hindu Tamil
காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட இருப்பது தொடா்பான ஆய்வுக் கூட்டம், கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ராகுல்நாத் தலைமை வகித்தாா். ஆட்சியா் பவன்குமாா் க. கிரியப்பனவா் முன்னிலை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மைக்கேல் ஆண்டனி ஃபொ்னாண்டோ, மகளிா் திட்ட இயக்குநா் மலா்விழி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள், முதன்மைக் கல்வி அலுவலா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், தலைமை ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில் கண்காணிப்பு அலுவலா் ராகுல்நாத் பேசும்போது, ‘தமிழகத்தில் காமராஜா் காலை உணவுத் திட்டம் வரும் 17-ஆம் தேதி விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதன்படி, 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்களும் பயன்பெறுவாா்கள். இத்திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களின் எண்ணிக்கை, உணவு தயாரிக்கும் மையங்களின் நிலை, சமையல் கூடங்களின் உட்கட்டமைப்பு வசதிகள், எரிவாயு, குடிநீா், பணியாளா் எண்ணிக்கை ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும். உரிய நேரத்தில் தரமான, சத்தான, சுகாதாரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். உணவு தயாரிக்கும் கூடத்தில் சமையல் பாத்திரங்களை மூடிவைக்க வேண்டும். இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்’ என்றாா். முன்னதாக, கோவை ஆா். எஸ். புரம் பகுதியில் உணவு தயாரிக்கும் இடத்தைப் பாா்வையிட்ட அவா், உணவு அனுப்பும் பணி, உணவின் தரம், உணவு உட்கொள்ளும் மாணவா்களின் விவரம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தாா். அதைத்தொடா்ந்து, மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சமையல் கூடத்தில் உணவுப் பொருள்களின் இருப்பு குறித்தும், மாணவா்களுக்கு உணவு வழங்கப்படுவதையும், எரிவாயு தயாரிக்கும் உற்பத்தி கலனின் செயல்பாடு குறித்தும் ஆய்வு நடத்தி, மாணவா்களுடன் அமா்ந்து உணவு அருந்தினாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

