Politics · 1 outlet covered this

மோகன்லால், விஜய்யை விட சிறப்பாக நடனமாடுகிறேன்! ஏஐ விடியோ குறித்து கேரள முதல்வர் சதீசன்!

How outlets told it

Dinamani6547h ago

மோகன்லால், விஜய்யை விட சிறப்பாக நடனமாடுகிறேன்! ஏஐ விடியோ குறித்து கேரள முதல்வர் சதீசன்!

Read at Dinamani
மோகன்லால், விஜய்யை விட சிறப்பாக நடனமாடுகிறேன்! ஏஐ விடியோ குறித்து கேரள முதல்வர் சதீசன்!
Photo: Dinamani

நடிகர் மோகன்லால், என்னுடைய நண்பரும் தமிழக முதல்வருமான விஜய்யை விடவும், நான் சிறப்பாக நடனமாடுகிறேன் என்று ஏஐ நடன விடியோ குறித்து கேரள முதல்வர் சதீசன் பேசியிருக்கிறார். கேரளத்தில் அதிக மின்வெட்டுகள் நேரிடுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில், மாநில முதல்வர் வி. டி. சதீசன், மின்சாரத் துறை ஊழியர்கள் பின்னணியில் இருப்பது போல குழு நடனமாடுவது போன்ற செய்யறிவால் உருவாக்கப்பட்ட விடியோ வைரலாகி வருகிறது. பொதுவாக இதுபோன்ற விடியோக்களைப் பார்க்கும் எவர் ஒருவருக்கும் சற்று எரிச்சல்தான் வரும். ஆனால், கேரள முதல்வர் சதீசன், பொது நிகழ்ச்சி ஒன்றில் அது பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார். என்னை முன்னிலைப்படுத்தி ஒரு குழு நடன விடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது, அதைப் பார்த்து நான் ஆச்சரியமாகிவிட்டேன், அதில் நடிகர் மோகன்லால், என்னுடைய நண்பர் முதல்வர் விஜய்யைவிடவும் சிறப்பாக அதில் நான் நடனமாடுகிறேன். அவர்களை விட நன்றாகவே ஆடுகிறேன். நீங்களும் அதைப் பாருங்கள். பார்த்திருப்பீர்கள். அது ஒரு குழு நடனம். செய்யறிவு மூலம் அதனை உருவாக்கியிருக்கிறார்கள். தொழில்நுட்பத்தில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அடிப்படைப் பாடத்திலும் இதனை மாற்ற வேண்டும். காப்புரிமை பிரச்னை உள்ளிட்டவை குறித்து பாடங்கள் மாற்றப்படவேண்டும். வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப பாடங்களை உருவாக்க வேண்டும் என்று பேசினார்.