Education and jobs · 1 outlet covered this

காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை எவ்வளவு நாட்கள் தெரியுமா?

How outlets told it

News18 Tamil654d ago

காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை எவ்வளவு நாட்கள் தெரியுமா?

Read at News18 Tamil
காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை எவ்வளவு நாட்கள் தெரியுமா?
Photo: News18 Tamil

Trending:சற்றுமுன்பட்ஜெட் தொடர்Disco With KSDid You KnowOTT SpotShort NewsI3 With KSFollow Usfacebooktwitterinstagramyoutubeகாலாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை எவ்வளவு நாட்கள் தெரியுமா?Published by:Vijay Ramanathannews18-tamilLast Updated:Sep 09, 2026 10:12 PM ISTகாலாண்டு தேர்வு 16 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1/7பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியாகி உள்ள நிலையில், தேர்வுக்குப் பின்னர் எவ்வளவு நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்ற விவரத்தை தற்போது பார்க்கலாம்.2/7தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான 2026-2027 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியாகி உள்ளது. காலாண்டுத் தேர்வு 16 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.3/7அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு நடைபெறுவதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையில் குறிப்பிட்ட நாட்களில் அந்தப் பாடத்திற்கு தேர்வினை நடத்த வேண்டும்.4/79 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 2 மணி முதல் 4.30 மணி வரையிலும், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் தேர்வு நடைபெறும். மேலும் செப்டம்பர் 16 - தமிழ், செப். 17 - ஆங்கிலம், செப். 18 - விருப்பப்பாடம், செப். 21 - கணக்கு, செப். 22 - உடற்கல்வி, செப். 23 - அறிவியல், செப். 24 - சமூக அறிவியல் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.5/712 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 2 மணி முதல் 5 மணி வரையிலும் தேர்வு நடத்தப்படும். தேர்வு அட்டவணை: செப். 16 - தமிழ், செப். 17 - ஆங்கிலம், செப். 18 - இயற்பியல், பொருளியியல், வேலைவாய்ப்பு திறன்கள், செப். 21 - கணக்கு, விலங்கியல், வணிகவியல், ஊட்டச்சத்து மற்றும் உணவியல், ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, விவசாயம், நர்சிங் (பொது)6/7செப். 22 - தொடர்பு ஆங்கிலம், இந்தியக் கலாச்சாரம் மற்றும் கொள்கைகள், கம்ப்யூட்டர் அறிவியல், உயர் வேதியியல், சிறப்பு தமிழ், மனையியல், புள்ளியியல், நர்சிங் (தொழிற்கல்வி), அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், செப். 23 - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை மின்னணுவியல், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை இயந்திர பொறியியல், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், ஜவுளி தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் செயலக்கம், செப். 25 - வேதியியல், கணக்கு பதிவியியல், புவியியல்7/7இதனிடையே காலாண்டுத் தேர்வுகள் முடிந்து செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் அக்டோபர் 04 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. பள்ளி விடுமுறைக்குப் பின் அரையாண்டு தேர்வுக்கான பாட வகுப்புகள் தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.