1 outlet covered this

சாலமன் பாப்பையா மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது - துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இரங்கல்

How outlets told it

Daily Thanthi992d ago

சாலமன் பாப்பையா மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது - துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இரங்கல்

Read at Daily Thanthi
சாலமன் பாப்பையா மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது - துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இரங்கல்
Photo: Daily Thanthi

Published on: 12 Sep 2026, 6:55 amசென்னை, பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 90. சாலமன் பாப்பையா மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் சாலமன் பாப்பையா மறைவுக்கு துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. பட்டிமன்ற மரபின் வழியாக தமிழ் மொழியின் செழுமையை எண்ணற்ற இல்லங்களுக்குக் கொண்டு சென்று, தலைமுறைகளை ஊக்குவித்தவர். தமிழ்மொழி, இலக்கியம் மற்றும் பண்பாட்டிற்காக அவர் ஆற்றிய வாழ்நாள் முழுவதுமான பணி என்றும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்கள், மாணவர்கள் மற்றும் அன்பர்களுக்கும், தமிழ் இலக்கிய உலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. பட்டிமன்ற மரபின் வழியாக தமிழ் மொழியின் செழுமையை எண்ணற்ற இல்லங்களுக்குக் கொண்டு சென்று, தலைமுறைகளை ஊக்குவித்தவர். தமிழ்மொழி, இலக்கியம் மற்றும் பண்பாட்டிற்காக அவர் ஆற்றிய வாழ்நாள் முழுவதுமான பணி என்றும்… pic.twitter.com/w17NxlLvyp— Vice-President of India (@VPIndia) September 12, 2026