Cinema and entertainment · 1 outlet covered this

'குரலில் தனித்தன்மை, மாயாஜாலம்'; சின்மயி என்றதும் பலரது நினைவுக்கு வரும் 10 பாடல்கள்

How outlets told it

BBC News Tamil463d ago

'குரலில் தனித்தன்மை, மாயாஜாலம்'; சின்மயி என்றதும் பலரது நினைவுக்கு வரும் 10 பாடல்கள்

Read at BBC News Tamil
'குரலில் தனித்தன்மை, மாயாஜாலம்'; சின்மயி என்றதும் பலரது நினைவுக்கு வரும் 10 பாடல்கள்
Photo: BBC News Tamil

பட மூலாதாரம், ChinmayiSripadaபடக்குறிப்பு, பாடகி சின்மயிஎழுதியவர், மீனாட்சி சுந்தரம் பதவி, பிபிசி தமிழுக்காக பிரசுரிக்கப்பட்டது 10 செப்டெம்பர் 2026புதுப்பிக்கப்பட்டது 11 செப்டெம்பர் 2026வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்தமிழ் சினிமா பாடகிகளில் சின்மயிக்கு தனித்துவமான இடம் உண்டு. அவருக்கு இன்று (செப்டம்பர் 10) பிறந்த நாள். மும்பையில் பிறந்த அவர், இசை ஆய்வாளரான தனது தாய் பத்மஹாசினியிடம் கர்நாடக இசை மற்றும் இந்துஸ்தானி செவ்வியல் இசையை கற்றார். பின்னர் அவரது குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்தது.11 வயதில் கர்நாடக இசையில் இளம் திறமையாளர்களுக்கான கலாசாரத் திறனாய்வுக்கான கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் (CCRT) மூலம் உதவித்தொகையும், 2000ஆம் ஆண்டில் கஜல் பாடல்களுக்காக அகில இந்திய வானொலியின் தங்கப் பதக்கம், 2002ஆம் ஆண்டு இந்துஸ்தானி செவ்வியல் இசைக்காக வெள்ளிப் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களை திரைத்துறைக்கு வருவதற்கு முன்னரே பெற்றுள்ளார் சின்மயி. சின்மயியின் முதல் பாடல்தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற பாடல் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பாடகர் ஸ்ரீனிவாஸ் அவரை இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானுக்கு அறிமுகப்படுத்தினார். மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் 'ஒரு தெய்வம் தந்த பூவே' பாடல் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார் சின்மயி.'மங்கள் பாண்டே தி ரைசிங் ' திரைப்படத்தில் 'ஹோலி ரே' பாடலின் மூலம் பாலிவுட்டில் கால் பதித்தார்.'குரு' திரைப்படத்தில் இடம் பெற்ற 'தேரே பினா' மற்றும் 'மய்யா' ஆகிய பாடல்கள் அவரது திரைபயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. இளையராஜா, ஏ. ஆர். ரகுமான், தேவா, வித்யாசாகர், யுவன் ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், டி. இமான், ஜிப்ரான், ஜி. வி. பிரகாஷ், அனிருத் உள்ளிட்ட பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பாடியுள்ளார் சின்மயி. தமிழ் மொழியில் ஏராளமான பாடல்களை பாடியுள்ள சின்மயி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, இந்தி உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார். கடந்த 2018ஆம் ஆண்டில் பிரேம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் சின்மயியையே பாட வைத்தார் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா. பல மொழிகளில் தடம் பதித்த பாடகராக அறியப்பட்ட சின்மயி, பிரபல டப்பிங் கலைஞரும் கூட. இவர் நயன்தாரா, திரிஷா, சமந்தா, பூமிகா, சமீரா ரெட்டி, தமன்னா, நீதுசந்திரா, எமி ஜாக்சன், காஜல் அகர்வால், டாப்ஸி உட்பட பல நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ளார்.Skip அதிகம் படிக்கப்பட்டது and continue readingஅதிகம் படிக்கப்பட்டதுEnd of அதிகம் படிக்கப்பட்டதுஇசைத்துறையில் சின்மயி கடந்து வந்த பாதை குறித்து அவருடன் பணியாற்றியவர்கள் மற்றும் அவரது நண்பர்கள் என பலரிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். பட மூலாதாரம், ChinmayiSripadaபடக்குறிப்பு, சின்மயியின் திறமையை சினிமா முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்கிறார் இசையமைப்பாளர் சாம். சி. எஸ்சின்மயி குரலில் சாம் சி. எஸ்-க்கு பிடித்த பாடல்கள் இசையமைப்பாளர் சாம். சி. எஸ்சிடம் பாடகி சின்மயி பாடல்களில் பிடித்தவை குறித்து கேட்டபோது, 'கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சின்மயியை தெரியும். எங்கள் கூட்டணியில் பல வெற்றி பாடல்களை கொடுத்து இருக்கிறோம். குறிப்பாக, அருள்நிதி, மகிமா நடித்த 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தில் வரும் 'உயிர் உருவாத' பாடல் எனக்கு பிடிக்கும். உண்மையில் அந்த பாடலை அவர் உருகி பாடியிருப்பார்" என்றார். மேலும், "ரவி மோகன், ராஷி கண்ணா நடித்த 'அடங்க மறு' படத்தில் வரும் 'ஓ சாயாலி' என்ற பாடலும் எனக்கு பிடிக்கும். கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற 'மகாஅவதார் நரசிம்மா' படத்தில் கூட சின்மயி பாடியிருந்தார். அந்தப் படத்தில் அவர் பாடிய பாடல் இந்தியிலும் பெரிய வெற்றி பெற்றது. அவர் குரலில் தனித்தன்மை, மாயாஜாலம் இருக்கிறது. அவரது திறமையை சினிமா முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன்." என்கிறார். பட மூலாதாரம், samcsmusic/Instagramபடக்குறிப்பு, சாம் சி. எஸ்."முத்த மழை பாடலில் நடந்த சுவாரஸ்யம்"வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்வாட்ஸ்ஆப்பில்பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்பின்தொடர கிளிக் செய்யவும்வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவுசின்மயி பாடியதில் சமீபத்தில் பிரபலமான பாடல்களில் ஒன்று மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா நடித்த தக்லைஃப் படத்தின் 'முத்தமழை' பாடல். அந்த பாடலை அவர் தமிழ் படத்தில் பாடவில்லை, மாறாக இந்தியில் பாடியிருந்தார். மேலும், இசை வெளியீட்டு விழாவில் தமிழ் பாடலை அவர் ரசித்து பாடியது பெரும் கவனம் பெற்றது. அந்த பாடலை எழுதியவரும் அந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவருமான சிவாஆனந்த் பிபிசி தமிழிடம் அந்த பாடல் உருவான அனுபவம் குறித்து பேசுகையில், ''நான் மணிரத்னம் குழுவில் பணியாற்றியதால் சின்மயி குரலை முதலில் 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தின் எடிட்டிங் பணிகள் நடக்கும்போதுதான் கேட்டேன். 'தெய்வம் தந்த பூவே' பாடலை பற்றி சொல்லவே வேண்டாம். சின்மயியின் குரல் ஒருவகை காந்தக்குரல். முத்தமழை பாடலை முதலில் இந்தியில் பாடினார் சின்மயி. அப்போது சில நெளிவு, சுளிவுகள் சேர்க்கப்பட்டு வேறு ஒருவித வடிவம் உருவானது. அந்த கூடுதல் அலங்காரங்களை சேர்த்து தமிழ் பாடல் வெளியீட்டு விழா மேடையில், தமிழ் பாடலை பாடி எல்லாரையும் கவர்ந்துவிட்டார்." என்றார். தமிழில் சின்மயி பாடிய பாடல்களில் பிரபலமான சில பாடல்கள்1) தெய்வம் தந்த பூவேபட மூலாதாரம், ChinmayiSripadaபடக்குறிப்பு, மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'கன்னத்தில் முத்தமிட்டால் ' பாடல் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார் சின்மயி. மணிரத்னம் இயக்கத்தில் உருவான கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம் பெற்ற பாடல். அம்மா, மகளின் பாசப் பிணைப்பை வெளிப்படுத்துவதாக இருந்தாலும், பின்னணியில் போர்க்களம், வலி, பிரிவு என பல உருக்கமான பின்னணியை உள்ளடக்கிய பாடலாக இருந்தது. 2) சந்திப்போமோ இருவரும் சந்திப்போமோ?'எனக்கு 20 உனக்கு 18' படத்தில் சின்மயி பாடிய பாடல். ஏ. ஆர். ரஹ்மான் இசையில், இளமை உற்சாகத்துடன் கூடிய வரிகளை எழுதியிருந்தார் பா. விஜய். காதலனை காதலி தேடுகிற பாணியில் பாடல் அமைந்திக்கும். இன்றைக்கும் பலரும் அதிகம் முணுமுணுக்கப்படும் பாடலாக உள்ளது.3) சரசர சாரகாத்துஜிப்ரான் இசையில் வாகை சூடவா படத்தில் இடம்பெற்றது இந்தப் பாடல். ஒரு கிராமத்து பெண்ணின் குறும்பையும் அவளது காதலையும் சொல்லும் இந்த பாடலை அதற்கான பாவனைகளில் சிறப்பாக பாடியிருப்பார் சின்மயி. கிராமத்து பாணியில் அவர் பாடிய இந்த பாடல் அவர் பாடிய பாடல்களில் தனித்து விளங்குகின்றது. 4) சஹானா சாரல் தூவுதோஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஷ்ரேயா நடித்த சிவாஜி திரைப்படத்தில் இடம்பெற்ற அழகியல் நிறைந்த பிரமாண்ட பாடலாக உருவானது. இந்த பாடலில் சின்மயியின் குரலும் பாடல் காட்சிகள் உருவான விதமும் இரண்டும் பிரமிக்க வைத்திருக்கும். தனக்கே உரிய பாணியில் இந்தப் பாடலை காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குநர் ஷங்கர்.5) மைய்யா, மைய்யாபட மூலாதாரம், ChinmayiSripadaபடக்குறிப்பு, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, இந்தி உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார் சின்மயிகுரு படத்தில் ஏ. ஆர். ரஹ்மான் இசையில் உருவான பாடல். மல்லிகா ஷெராவத் அந்த பாடலுக்கு நடனமாடியிருப்பார். பாடலின் இடையிடையே வசனங்கள் வருவதும் பின்னர் பாடல்கள் தொடர்வதும் என இந்த பாடல் இளைஞர்களை அதிகம் கவர்ந்த பாடலாக அமைந்திருக்கும்.6) சின்னம்மா சிலுக்கம்மாசக்கரக்கட்டி படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலுக்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்திருப்பார். பென்னிதயாளுடன் இணைந்து பாடியிருப்பார் சின்மயி. அந்த தெலுங்கு வார்த்தை ஹம்மிங், புல்லாங்குழல் இசை ஆகியவை பாடலுக்கு பெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது.7) காதலே காதலேகடந்த 10 ஆண்டுகளில் சின்மயி குரலில் வந்த சிறந்த காதல் பாடல்களில் ஒன்றாக இன்றும் பலரால் முணுமுணுக்கப்படும் பாடல்களில் ஒன்று. பிரேம் இயக்கிய 96 திரைப்படத்தில், கோவிந்த் வசந்தா இசையில் சின்மயி பாடிய இந்த காதல் பாடல், காதலர்கள் மட்டுமல்லாது பலரையும் கவர்ந்தது. கார்த்திக் நேத்தா வரிகளும், அதற்கேற்ற காட்சியமைப்பும் ரசிகர்களுக்கு விருந்தாகின.8) ஆருயிரே மன்னிப்பாயாஇயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் கூட்டணியில் உருவான குரு படத்தில் இடம்பெற்றது இந்தப்பாடல். இந்தப் பாடலில் ஐஸ்வர்யா ராய் நடித்திருப்பார். இந்தப் பாடலில் அவரது குரல் சிறிது நேரம் வந்தாலும், அத்தனை ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்தது.9) இதயத்தில் ஏதோ ஒன்றுஅஜித், அனுஷ்கா நடித்த என்னை அறிந்தால் படத்தில் பலரையும் கவர்ந்திழுத்த இந்தப் பாடல் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், பாடலாசிரியர் தாமரை, சின்மயி கலந்த கூட்டணியில் உருவானது.10) அன்பில் அவன்கௌதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் வரும் இந்த பாடல் வரிகளை யாராலும் வெறுக்க முடியாது. காட்சியமைப்பும், சிம்பு, திரிஷா நடனமும், ஏ. ஆர். ரகுமான் இசையும் இளைஞர்களை கொண்டாட வைத்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு