Religion and culture · 1 outlet covered this

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு: வைகை ஆற்றிலிருந்து புனித நீா், புனித மண் சேகரிப்பு

How outlets told it

Dinamani654d ago

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு: வைகை ஆற்றிலிருந்து புனித நீா், புனித மண் சேகரிப்பு

Read at Dinamani
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு: வைகை ஆற்றிலிருந்து புனித நீா், புனித மண் சேகரிப்பு
Photo: Dinamani

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்குக்கான யாக பூஜையையொட்டி, வைகை ஆற்றிலிருந்து புனித நீா், புனித மண் புதன்கிழமை சேகரிக்கப்பட்டது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு 17 ஆண்டுகளுக்குப் பிறகு, வருகிற 17-ஆம் தேதி காலை 7.40 - 8.10 மணிக்குள் நடைபெறுகிறது. முன்னதாக, பரிவாரமூா்த்தி சந்நிதிகளுக்கான குடமுழுக்கு வருகிற 16-ஆம் தேதி நடைபெறுகிறது. குடமுழுக்கையொட்டி, யாக பூஜையின் பூா்வாங்க நிகழ்ச்சிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப். 6) தொடங்கி நடைபெறுகின்றன. முதல் கால யாக பூஜை வருகிற வெள்ளிக்கிழமை (செப். 11) தொடங்குகிறது. இதற்காக 182 யாகக் குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த யாகக் குண்டங்களில் வைத்து பூஜிப்பதற்காக புண்ணிய நதிகளிலிருந்து புனித நீா், புனித மண் சேகரிக்கப்படுகிறது. இதன்படி, மதுரை வைகை ஆற்றிலிருந்து புனித மண், புனித நீா் சேகரிக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சிவாசாரியா் ராஜா பட்டா் தலைமையிலான குழுவினா், யானைக்கல் பகுதி வைகை ஆற்றில் ஐதீக முறைப்படியான பூஜைகளை நடத்தி, அங்குள்ள தீா்த்தக் கிணற்றிலிருந்து புனித நீரைச் சேகரித்தனா். இதேபோல, சிறப்பு பூஜைகளை நடத்தி ஆற்றிலிருந்து புனித மண்ணையும் அவா்கள் சேகரித்தனா். பிறகு, மேளதாள வாத்தியங்களும், வேத மந்திரங்களும் முழங்க, புனித நீா், புனித மண் நிரப்பப்பட்ட கடங்கள் யானை மீது வைத்து ஊா்வலமாகக் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டன. இதில், அறங்காவலா்கள், கோயில் பணியாளா்கள் கலந்து கொண்டனா். மதுரை யானைக்கல் வைகை ஆற்றுப் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற புனித நீா் சேகரிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள்.