Sports · 1 outlet covered this

கடைசி ஒருநாள் போட்டி: நமீபியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி

How outlets told it

Daily Thanthi9922h ago

கடைசி ஒருநாள் போட்டி: நமீபியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி

Read at Daily Thanthi
கடைசி ஒருநாள் போட்டி: நமீபியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி
Photo: Daily Thanthi

விந்தோக்,

3வது ஒருநாள் போட்டியில் நமீபியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றிபெற்றது.

நமீபியா - தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நமீபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில், ஏற்கனவே நடந்த 2 போட்டிகளிலும் நமீபியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றிபெற்றது.

டாஸ்

இந்நிலையில், நமீபியா, தென் ஆப்பிரிக்கா இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி விந்தோக்கில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நமீபியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

நமீபியா 156 ரன்களுக்கு ஆல் அவுட்

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நமீபியா தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 36.2 ஓவரில் 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் செனி கிரீன் அதிகபட்சமாக 33 ரன்கள் சேர்த்தார். சிறப்பாக பந்து வீசிய தென் ஆப்பிரிக்க கேப்டன் பிஜொன் பொர்டியூன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தென் ஆப்பிரிக்கா வெற்றி

இதையடுத்து, 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலபமான இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 21.3 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் நமீபியாவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றிபெற்றது. சிறப்பாக ஆடிய தென் ஆப்பிரிக்க தொடக்க வீரர் ஜோர்டன் ஹெர்மன் அதிகபட்சமாக 77 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

தொடரை முழுமையாக கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3-0 என்ற புள்ளி கணக்கில் தென் ஆப்பிரிக்கா முழுமையாக கைப்பற்றியது.