அம்மனுக்கு எலுமிச்சை மாலை போடுவது சரியா.? - ஆன்மிக நம்பிக்கைகள் சொல்லும் முக்கிய தகவல்
Read at News18 TamilReligion and culture · 1 outlet covered this
அம்மனுக்கு எலுமிச்சை மாலை போடுவது சரியா.? - ஆன்மிக நம்பிக்கைகள் சொல்லும் முக்கிய தகவல்
How outlets told it

Trending:சற்றுமுன்Disco With KSDid You KnowOTT SpotDecodeShort NewsI3 With KSFollow Usfacebooktwitterinstagramyoutubeஅம்மனுக்கு எலுமிச்சை மாலை போடுவது சரியா.? - ஆன்மிக நம்பிக்கைகள் சொல்லும் முக்கிய தகவல்Reported by:S SanthanakumarPublished by:pradeepa mLast Updated:Sep 13, 2026 3:00 PM ISTஊசி குத்தி மாலையாக சார்த்துவதைவிட முழுமையான எலுமிச்சம்பழங்களை இறைவனுக்கு சமர்ப்பித்து பிரசாதமாக பெறுவது சிறந்தது என ஆன்மிக நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன. 1/7கோயில்களில் அம்மன் பைரவர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு எலுமிச்சம்பழங்களை மாலையாக கோர்த்து சார்த்தும் வழக்கம் பக்தர்களிடையே பரவலாக உள்ளது. ஆனால் ஊசி குத்தி மாலையாக சார்த்துவதைவிட முழுமையான உதிரி பழங்களாகவே எலுமிச்சம்பழங்களை இறைவனுக்கு சமர்ப்பிப்பது சிறந்தது என ஆன்மிக வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன.2/7எலுமிச்சை தெய்வ வழிபாட்டிலும் மங்கல நிகழ்வுகளிலும் முக்கியத்துவம் வாய்ந்த கனியாக கருதப்படுகிறது. ஆன்மிக ரீதியாக இது ராஜகனி நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் வசீகர கனி என்றும் போற்றப்படுகிறது. எலுமிச்சம்பழங்களை மாலையாக கோர்க்கும்போது ஊசி குத்தப்படுவதால் அவற்றை பின்னர் பிரசாதமாக பயன்படுத்துவது சிரமமாகிறது. ஊசி குத்தப்பட்ட பழங்களில் காற்று மற்றும் கிருமிகள் புகும் வாய்ப்பும் இருப்பதால் அவை இறுதியில் வீணாகும் நிலை ஏற்படுகிறது.3/7இதனால் பக்தர்கள் எலுமிச்சம்பழங்களை மாலையாக வழங்குவதற்கு பதிலாக முழுமையான உதிரி பழங்களாக இறைவனுக்கு சமர்ப்பிக்கலாம் என கூறப்படுகிறது. சிவன், விநாயகர், பைரவர், அம்மன் உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களுக்கும் எலுமிச்சை உகந்த கனியாக கருதப்படுகிறது. முற்காலத்தில் சமயபுரம், மாங்காடு, திருவேற்காடு, மேல்மலையனூர் உள்ளிட்ட சக்தி தலங்களில் பக்தர்கள் கூடை கூடையாக உதிரி எலுமிச்சம்பழங்களை அம்பாளுக்கு சமர்ப்பித்ததாக ஆன்மிக மரபுகளில் குறிப்பிடப்படுகிறது.4/7வழிபாட்டுக்கு பின்னர் அம்பாளின் மடியில் அல்லது திருப்பாதங்களில் வைக்கப்பட்ட எலுமிச்சம்பழங்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன. பக்தர்கள் அவற்றை கண்களில் ஒற்றி வீட்டிற்கு எடுத்து சென்று ஜூஸ் உள்ளிட்ட வகைகளில் குடும்பத்துடன் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு இறைவனின் பாதத்தில் வைத்து ஆசீர்வதிக்கப்பட்ட கனி தெய்வ அருளின் அடையாளமாக பக்தர்களால் போற்றப்படுகிறது.5/7உதிரி எலுமிச்சம்பழங்களை சமர்ப்பிக்க விரும்பும் பக்தர்கள் 5, 7, 9, 11, 14, 16, 18, 23, 25, 27, 32, 33, 36, 38, 41, 43, 95, 97, 108 போன்ற எண்ணிக்கைகளில் வழங்கலாம் என ஆன்மிக நம்பிக்கைகள் கூறுகின்றன. ராகு திசை நடப்பவர்கள் 4, 13, 22, 31, 40 போன்ற கூட்டுத்தொகை 4 வரும் எண்ணிக்கைகளில் சமர்ப்பிப்பது விசேஷம் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் வீட்டில் அல்லது அலுவலகத்தில் எலுமிச்சம்பழத்தை வைத்திருப்பது திருஷ்டியை நீக்கி நேர்மறை அதிர்வை நிலைநிறுத்தும் என்ற நம்பிக்கையும் பக்தர்களிடையே உள்ளது.6/7கோயிலில் எவ்வளவு எலுமிச்சம்பழங்களை சமர்ப்பித்தாலும் இறைவனின் பாதத்தில் வைத்து ஆசீர்வதிக்கப்பட்ட 5 பழங்களை மட்டும் பிரசாதமாக பெற்றுக்கொண்டு மீதமுள்ள பழங்களை மற்ற பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க கோயிலிலேயே விட்டு செல்லலாம் என ஆன்மிக வழிகாட்டுதலில் கூறப்படுகிறது.7/7இதன் மூலம் எலுமிச்சம்பழங்கள் வீணாகாமல் பல பக்தர்களுக்கும் பிரசாதமாக சென்றடையும். எனவே பகட்டிற்காக மாலையாக கோர்த்து வீணாக்குவதைவிட உதிரி பழங்களாக இறைவனுக்கு சமர்ப்பித்து அவை பிரசாதமாக பலருக்கும் பயன்பட செய்வதே சிறந்த வழிபாட்டு முறையாக கருதப்படுகிறது.
