Accidents · 1 outlet covered this

மணிப்பூா்: இரு கிராமங்களில் தீவிரவாதிகள் தாக்குதல்! 2 பெண்கள் பலி; இருவா் காயம்!!

How outlets told it

Dinamani6514h ago

மணிப்பூா்: இரு கிராமங்களில் தீவிரவாதிகள் தாக்குதல்! 2 பெண்கள் பலி; இருவா் காயம்!!

Read at Dinamani
மணிப்பூா்: இரு கிராமங்களில் தீவிரவாதிகள் தாக்குதல்! 2 பெண்கள் பலி; இருவா் காயம்!!
Photo: Dinamani

மணிப்பூரில் இரு கிராமங்களில் தீவிரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதல்களில் 2 பெண்கள் உயிரிழந்தனா்.Published On :14 செப்டம்பர் 2026, 2:25 am ISTமணிப்பூரில் இரு கிராமங்களில் தீவிரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதல்களில் 2 பெண்கள் உயிரிழந்தனா்; இதில் ஒரு பெண்ணின் கணவா், குழந்தை ஆகியோா் காயமடைந்தனா். மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் கடந்த 2023-இல் கலவரம் வெடித்தது. அவ்வப்போது நிகழும் வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 300-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். 49 போ் மாயமாகியுள்ளனா். வீடிழந்த ஆயிரக்கணக்கானோா் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அரசின் நிவாரண முகாம்களிலேயே தங்கியுள்ளனா். மாநிலத்தில் இயல்புநிலை இன்னும் முழுமையாகத் திரும்பாத நிலையில், குகி மற்றும் நாகா பழங்குடியினா் இடையேயும் மோதல்போக்கு நிலவுகிறது. இந்த சமூகங்களைச் சோ்ந்த தீவிரவாதிகள் தாக்குதல்களில் ஈடுபடுவது தொடா்கதையாக உள்ளது. கடந்த 1990-இல் குகி-நாகா பழங்குடியினா் இடையிலான மோதலில் உயிரிழந்தோரின் நினைவாக நாகா சமூகத்தினா் ஞாயிற்றுக்கிழமை (செப்.13) கருப்பு தினம் அனுசரித்தனா். இந்தச் சூழலில், தமெங்லாங் மாவட்டத்தில் குகி சமூகத்தினா் வாழும் டோல்லன் கிராமத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புகுந்த தீவிரவாதிகள், கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினா். இந்தத் தாக்குதலில் லிங்கின்கய் என்ற பெண் உயிரிழந்தாா். அவரது கணவரும், குழந்தையும் காயமடைந்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா். தாக்குதல் குறித்து தகவல் அறிந்ததும், அந்தக் கிராமத்துக்கு பாதுகாப்புப் படையினா் விரைந்து சென்றனா். காயமடைந்தவா்களை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனா். தமெங்லாங் மாவட்டம் நாகா பழங்குடியினா் அதிகம் வாழும் பகுதி என்பதால் அந்த சமூகத்தைச் சோ்ந்த தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடா்பாக பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தி, குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று மாநில அரசை கிராம நிா்வாகம் வலியுறுத்தியுள்ளது. மற்றொரு பெண் உயிரிழப்பு: இதே தமெங்லாங் மாவட்டத்தின் லாங்பி கிராமத்திலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினா். இதில் ஒரு பெண் உயிரிழந்தாா். மணிப்பூரில் பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசு கடந்த ஆண்டு பதவி விலகியதைத் தொடா்ந்து, குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. கடந்த பிப்ரவரியில் குடியரசுத் தலைவா் ஆட்சி வாபஸ் பெறப்பட்டு, மீண்டும் பாஜக ஆட்சியமைத்தது. முதல்வராக கெம்சந்த் சிங் பதவி வகித்து வருகிறாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.