Cinema and entertainment · 1 outlet covered this

தமன்னா, அதிதி ராவ் நடித்த “லஸ்ட் ஸ்டோரிஸ் 3” டிரெய்லர் வெளியானது

How outlets told it

Daily Thanthi992d ago

தமன்னா, அதிதி ராவ் நடித்த “லஸ்ட் ஸ்டோரிஸ் 3” டிரெய்லர் வெளியானது

Read at Daily Thanthi
தமன்னா, அதிதி ராவ் நடித்த “லஸ்ட் ஸ்டோரிஸ் 3” டிரெய்லர் வெளியானது
Photo: Daily Thanthi

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் இந்தியத் தொடர்களில் கவனம் பெற்ற தொடர் ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’. வயது வந்தவர்களுக்கான கதையாக ஒவ்வொரு குறும்படக் கதையும் காதல், காமம், உறவு மீறல்கள் ஆகியவற்றால் பிணைந்திருக்கும் மனங்களை வெளிப்படுத்தும்படி எழுதப்பட்டிருக்கும்.‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ முதல் முறையாக கடந்த 2018-ம் ஆண்டு வெளியானது. அனுராக் காஷ்யப், ஜோயா அக்தர், திப்கர் பானர்ஜி மற்றும் கரண் ஜோகர் ஆகியோர் அதன் நான்கு கதைகளை இயக்கி இருந்தனர். அதனைத் தொடர்ந்து ஐந்து வருடங்கள் கழித்து ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ தொகுப்பை ஆர். பால்கி, கொங்கனா சென் ஷர்மா, அமித் ரவிந்தரநாத் ஷர்மா மற்றும் சஞ்சய் கோஷ் இயக்கி இருந்தனர். இது 2023-ம் ஆண்டு வெளியானது.‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ தொடரின் முதல் மற்றும் இரண்டாம் சீசன்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து மூன்றாம் சீசன் உருவாகியுள்ளது. இதில், நடிகர்கள் சித்தார்த், ராதிகா ஆப்தே, அதிதி ராவ் ஹைதாரி, கொங்கனா சென் சர்மா, விஜய் வர்மா, அபிஷேக் பானர்ஜி, அலி பசல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த சீசனுக்கான குறும்படங்களை இயக்குநர்கள் விக்ரமாதித்யா மோத்வானே, கிரண் ராவ், ஷகுன் பத்ரா, விஷால் பரத்வாஜ் ஆகியோர் இயக்கியுள்ளனர். இந்நிலையில், தமன்னா, அதிதி ராவ் நடிப்பில் உருவான ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 3’ தொடரின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இத்தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது.