மகனுக்காக சொத்துக்களை விற்ற தந்தை.. இந்திய கிரிக்கெட் வீரர் உயிர் பிழைத்த கதை தெரியுமா?
Read at News18 TamilSports · 1 outlet covered this
மகனுக்காக சொத்துக்களை விற்ற தந்தை.. இந்திய கிரிக்கெட் வீரர் உயிர் பிழைத்த கதை தெரியுமா?
How outlets told it

Trending:சற்றுமுன்Disco With KSDid You KnowOTT SpotDecodeShort NewsI3 With KSFollow Usfacebooktwitterinstagramyoutubeமகனுக்காக சொத்துக்களை விற்ற தந்தை.. இந்திய கிரிக்கெட் வீரர் உயிர் பிழைத்த கதை தெரியுமா? Published by:Khalilullah Snews18-tamilLast Updated:Sep 12, 2026 7:32 PM ISTஇந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தந்தை மாரடைப்பால் இன்று காலமானார். தனது தந்தை குறித்து அவர் பேட்டியில் உருக்கமாக பேசியிருந்தார். 1/66 மாத குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். குழந்தையின் உயிருக்கு ஆபத்து என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். ஆனால், பொருளாதார நெருக்கடி. மகனுக்காக தனது சொத்துக்களை விற்று அவர் உயிரை காப்பாற்றினார் அந்த தந்தை. அந்த மகன் பின்னாளில் இந்திய கிரிக்கெட் வீரராக உருவாகி தந்தைக்கு பெருமை சேர்த்தார். யார் அவர் தெரியுமா?2/6கிரிக்கெட்டின் அனைத்து பார்மட்டுகளில் விளையாடி முத்திரை பதித்தவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த். இந்திய கிரிக்கெட் அணியில் மலையாள முகமாக கவனிக்கப்பட்டவர். 2 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற வீரர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. 2007-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பையையும், 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையையும் வென்ற இந்திய அணியில் ஸ்ரீசாந்த் விளையாடியிருந்தார்.3/6ஸ்ரீசாந்த் தந்தை சாந்தகுமாரன் நாயர். தாய் சாவித்திரி. மாரடைப்பு காரணமாக இன்று ஸ்ரீசாந்த் தந்தை உயிரிழந்தார். அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சாந்தகுமார் - சாவித்ரி தம்பதிக்கு 4வது குழந்தையாக பிறந்தவர் ஸ்ரீசாந்த். தன்னுடைய கரியரிலும், தான் சோர்ந்து இருந்த காலத்திலும், கனவுகளை எட்டிப்பிடிக்கவும் தந்தை உறுதுணையாக இருந்ததாக பேட்டி ஒன்றில் ஸ்ரீசாந்த் கூறியிருந்தார். மேலும் தான் குழந்தையாக இருந்தபோது நடந்த சம்பவத்தையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.4/6இது தொடர்பாக ஸ்ரீசாந்த் பழைய பேட்டி ஒன்றில் தந்தை குறித்து கூறும்போது, “நான் 6 மாத குழந்தையாக இருந்தபோது, எனக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. வீடு மற்றும் நிலம் ஆகியவற்றை விற்று எனது அறுவை சிகிச்சைக்கான பணத்தை ஏற்பாடு செய்தார் அப்பா. நான் எப்போதெல்லாம் என்னுடைய பெற்றோரிடம் வாக்குவாதம் செய்கிறேனோ அப்போதெல்லாம் எனது பாட்டி, ‘நீ இன்று உயிருடன் இருக்க உன் பெற்றோர் தான் காரணம்’ என்று கூறுவார்கள்.5/6அந்த நேரத்தில், ‘உங்களுக்கு வேறு 3 குழந்தைகள் இல்லையா? இந்தக் குழந்தைக்காக இவ்வளவு பணத்தைச் செலவழிக்க விரும்புகிறீர்களா?’ என்று மருத்துவர் எனது அப்பாவிடம் கேட்க, ‘என் குழந்தைக்கு அறுவை சிகிச்சை கண்டிப்பாக செய்தாக வேண்டும்’ என்று பதிலளித்தார். அப்படிதான் என்னுடைய வாழ்க்கை தொடங்கியது.6/6அறுவை சிகிச்சைக்குப் பின் என் குழந்தை ஸ்ரீசாந்த் நல்லபடியாக வீடு திரும்பினால், அவனை கோவிலுக்கு சேவகனாக ஒப்படைக்கிறேன் என்று என் தந்தை கடவுளிடம் வேண்டினார். வேண்டுதல் நிறைவேறவே, அவர் அறுவை சிகிச்சை முடிந்ததும், 6 மாத கைகுழந்தையாக என்னை தூக்கிக்கொண்டு சென்று கோவில் அர்ச்சகரிடம் ஒப்படைத்துவிட்டார். அதை அறிந்த என்னுடைய பாட்டி உடனே அந்த கோவிலுக்கு சென்று அர்த்தகரிடமிருந்து என்னை திரும்ப பெற்று வீட்டுக்கு வந்தார்.” என அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார் ஸ்ரீசாந்த்.
