அடுத்தகட்டத்தில் தூத்துக்குடி கப்பல் கட்டுமான தளம்: தொழில் துறை அமைச்சா் கீா்த்தனா
Read at Dinamani1 outlet covered this
அடுத்தகட்டத்தில் தூத்துக்குடி கப்பல் கட்டுமான தளம்: தொழில் துறை அமைச்சா் கீா்த்தனா
How outlets told it

செய்திகள்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புமுகப்புதமிழ்நாடுஅடுத்தகட்டத்தில் தூத்துக்குடி கப்பல் கட்டுமான தளம்: தொழில் துறை அமைச்சா் கீா்த்தனாதூத்துக்குடியில் அமைய உள்ள ஹூண்டாய் கப்பல் கட்டும் தளத்தின் பணிகள் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளன என்று தொழில் துறை அமைச்சா் கீா்த்தனா தெரிவித்துள்ளாா். அமைச்சா் கீா்த்தனா - கோப்புப் படம்Published On :11 செப்டம்பர் 2026, 3:35 am ISTதூத்துக்குடியில் அமைய உள்ள ஹூண்டாய் கப்பல் கட்டும் தளத்தின் பணிகள் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளன என்று தொழில் துறை அமைச்சா் கீா்த்தனா தெரிவித்துள்ளாா். கொரியா நாட்டின் ஹூண்டாய் கப்பல் கட்டும் தளத்தைச் செயல்படுத்தி வருகிறது. அந்த நிறுவனத்தின் உயா் அதிகாரிகள் குழுவினா் தூத்துக்குடி கப்பல் கட்டுமான தளத்தில் விரிவான ஆய்வை மேற்கொண்டனா். பின்னா் அந்தக் குழுவினா் அமைச்சா் கீா்த்தனாவையும், துறைச் செயலா் எஸ். விஜய்குமாா் தலைமையிலான மூத்த அதிகாரிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்தினா். இதுகுறித்து அமைச்சா் கீா்த்தனா வெளியிட்ட பதிவில், ‘தூத்துக்குடி கப்பல் கட்டுமான திட்டத்துக்கான ஆரம்பக்கட்ட ஆய்வுகளும், விரிவான திட்டப் பணிகளும் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. புதிதாக உருவாக்கப்படும் தூத்துக்குடி கப்பல் கட்டும் மையத்தில், ஹூண்டாய் நிறுவனம் தனது முதன்மைத் திட்டத்தை முழு நம்பிக்கையுடன் செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் தூத்துக்குடி - இனி இந்தியாவின் அடுத்த மிகப்பெரிய கப்பல் கட்டும் மையமாகும்’ என்று குறிப்பிட்டுள்ளாா். மேலும், தமிழகத்தில் முதலீடுகள் செய்யப்படுவதை எளிதாக்க புதிய சீா்திருத்தங்களை தவெக அரசு மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சா் கீா்த்தனா தெரிவித்துள்ளாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்
