பாட்டி சொன்ன பழக்கம்... கோழிக்கறிக்கு மட்டும் ஏன் ஆபத்து? நிபுணர்கள் எச்சரிக்கை!
Read at News18 TamilHealth · 1 outlet covered this
பாட்டி சொன்ன பழக்கம்... கோழிக்கறிக்கு மட்டும் ஏன் ஆபத்து? நிபுணர்கள் எச்சரிக்கை!
How outlets told it

பாட்டி சொன்ன பழக்கம்... கோழிக்கறிக்கு மட்டும் ஏன் ஆபத்து? நிபுணர்கள் எச்சரிக்கை!Published by:Aishwarya.snews18-tamilLast Updated:Sep 11, 2026 2:56 PM ISTஅசைவ உணவு உண்ணும் வீடுகளில், கோழிக்கறியை சமைப்பதற்கு முன் கழுவ வேண்டுமா? என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது. இரத்தக் கறைகளை நீக்க அல்லது துர்நாற்றத்தைக் குறைக்க மக்கள் பெரும்பாலும் கிச்சன் ஜிங்கில் கோழியைக் கழுவுகிறார்கள். ஆனால், இந்தப் பழக்கம் உங்கள் வீட்டில் உள்ள அனைவரையும் நோய்வாய்ப்படுத்தக்கூடும் என்று சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.News18காய்கறிகளாக இருந்தாலும் சரி, பழங்களாக இருந்தாலும் சரி, வீட்டிற்குக் கொண்டு வந்தவுடன் எல்லாவற்றையும் பயன்படுத்துவதற்கு முன்பு கழுவ வேண்டும். இதைத்தான் நம் பாட்டி காலத்திலிருந்தே நம் பாட்டிமார்கள் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளனர். பல நூற்றாண்டுகளாக நாம் இந்தப் பழக்கத்தைப் பின்பற்றி வருகிறோம். ஆனால், நீங்கள் இந்தப் விதியை சமைக்காத கோழிக்கறிக்குப் பயன்படுத்தினால், அது சரியல்ல என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். கோழிக்கறியை வீட்டிற்குக் கொண்டு வந்தவுடன் கழுவி, உடனடியாகச் சமைப்பது உடல்நலத்திற்கு ஆபத்தாக அமையக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர். காரணம் என்ன? தெரிந்துகொள்ளலாம்.
