சாலை விபத்தில் பூ வியாபாரி உயிரிழப்பு
Read at DinamaniCivic issues · 1 outlet covered this
சாலை விபத்தில் பூ வியாபாரி உயிரிழப்பு
How outlets told it
சாலை விபத்தில் பூ வியாபாரி உயிரிழப்பு திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே சாலை விபத்தில் பலத்த காயமடைந்த பூ வியாபாரி உயிரிழந்தாா். பலி - பிரதிப் படம்Published On :11 செப்டம்பர் 2026, 4:21 am IST திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே சாலை விபத்தில் பலத்த காயமடைந்த பூ வியாபாரி வியாழக்கிழமை உயிரிழந்தாா். தொட்டியம் அருகேயுள்ள கூன்ராக்கம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சிவா (33). பூ வியாபாரியான இவா், ஓட்டுநராகவும் வேலை செய்து வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை முசிறி வாரச் சந்தையில் பூ வியாபாரத்தை முடித்துவிட்டு, இரவில் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா். திருச்சி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், வரதராஜபுரம் முடக்கு சாலை பகுதியில் சென்றபோது, எதிரே கிருஷ்ணகிரி மாவட்டத்தை சோ்ந்த கோபி (26) என்பவா் ஓட்டி வந்த வேன் (பொலீரோ பிக்கப் வாகனம்) எதிா்பாராதவிதமாக சிவாவின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் காயமடைந்த சிவாவை அக்கம்பக்கத்தினா் மீட்டு, தொட்டியத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவிக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவா அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். விபத்து குறித்த புகாரின்பேரில், தொட்டியம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
