World · 1 outlet covered this

’நான் கர்ப்பமாக இருப்பது ஒரு சர்ப்ரைஸ்..’ சமந்தா பகிர்ந்த விசயம்!

How outlets told it

’நான் கர்ப்பமாக இருப்பது ஒரு சர்ப்ரைஸ்..’ சமந்தா பகிர்ந்த விசயம்!
Photo: Puthiya Thalaimurai

Published on: 12 Sep 2026, 11:18 amSummaryமுன்னணி நடிகை சமந்தா, மயோசிடிஸ் நோயால் தன்னம்பிக்கை, அடையாளம் அனைத்தும் சிதைந்த அனுபவத்தை பகிர்ந்து, மீண்டெழுவதில் கற்ற பாடல்களை கூறுகிறார். ‘மா இன்டி பங்காரம்’ வெற்றிக்குப் பிறகு, ‘தஸ்ஸடியா’ பாடல் படப்பிடிப்பில் தான் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது என்றும், குழந்தை வாழ்க்கையை மாற்றும் என்றாலும் அந்த மாற்றத்துக்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. 2022-ல் தனக்கு மயோசிடிஸ் (Myositis) என்ற ஆட்டோஇம்யூன் நோய் இருப்பதாக சமந்தா அறிவித்திருந்தார். அதன் பின் நடிப்பிலிருந்து விலகி இருந்தவர், இப்போது தான் மீண்டும் நடிக்க துவங்கி இருக்கிறார். அவரின் சமீபத்திய படம் `மா இன்டி பங்காரம்' படம் 100 கோடி வசூல் செய்தது. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது உடல்நல பிரச்னை வந்த போது அதனை எதிர்கொண்டது பற்றியும், அதில் இருந்த சிரமங்கள் பற்றியும் பகிர்ந்துள்ளார். சமந்தா - புரோட்டீன் டயட்முகநூல் ஒரு நடிகர் எனும் போது உங்களுக்கு அசாத்தியமான தன்னம்பிக்கை வேண்டும். எந்த சூழலையும் கையாள வேண்டும். உங்கள் தோற்றம், உடைகள், உடற்பயிற்சி என பல விஷயங்கள் மூலம் இந்த தன்னம்பிக்கையை கட்டமைத்திருப்பீர்கள். ஆனால் ஒரு உடல்நலப்பிரச்சனை உங்களுக்கு வரும்போது, அது நீங்கள் எவ்வளவு நம்பிக்கையானவர் என்பதை எல்லாம் ஒரு பொருட்டாகவே கொள்ளாது. அது எனக்கு நிகழ்ந்த போது என்னுடைய அடையாளத்தை இழந்ததாக உணர்ந்தேன். எனது கட்டுப்பாட்டில் எதுவுமே இல்லை என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. அதனை கையாளவே எனக்கு நிறைய காலம் தேவைப்பட்டது. எனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்ற கேள்வியும் எனக்கு இருந்தது. ஆனால் அதில் இருந்து வெளியே வர எனக்கு நிறைய பாடங்கள் தேவைப்பட்டது. மீண்டு வருவது, உறுதி, நம்பிக்கை போன்றவை நோய்மையில் இருக்கும் போது எவ்வளவு அவசியம் என கற்றுக்கொண்டேன். இதன் விளைவாக எல்லாமே மேம்பட்டது. SamanthaMa Inti Bangaramஅதே பேட்டியில் சமந்தா கருவுற்றிருப்பது குறித்து கேட்கப்பட “நான் கர்ப்பமாக இருப்பது ஒரு சர்ப்ரைஸ். குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து தானும் ராஜ் நிடிமோருவும் முன்பு ஒரு கட்டத்தில் எந்தவித கட்டாய முடிவும் இல்லாமல் இருந்தோம். குழந்தை இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று தான் நானும் ராஜும் நினைத்திருந்தோம். எனக்கு அதில் பிரச்சினை இல்லை, அவருக்கும் பிரச்சினை இல்லை. அதனால் இது எங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ். மேலும், ‘Maa Inti Bangaaram’ படத்திற்காக ‘Thassadiya’ பாடல் படப்பிடிப்பில் இருந்தபோதுதான் நான் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அந்த நேரத்தில் பாடலுக்கான நடன அசைவுகளை செய்ய வேண்டியிருந்தது, அதே சமயம் எனக்கு சிறிது உடல்நலக்குறைவும் இருந்தது. ஆனாலும் எல்லாமே சரியான நேரத்தில் நடந்தது போல இருந்தது. குழந்தை பிறந்தால் உங்கள் வாழ்க்கையே மாறிவிடும் என்று எல்லோரும் சொல்கிறார்கள். அந்த மாற்றத்துக்கு நான் தயாராக இருக்கிறேன்” என்று சமந்தா கூறியுள்ளார்.