தாம்பரம் - சென்னை கடற்கரை புறநகர் ரயில் சேவை இன்று ரத்து
Read at DinamaniCivic issues · 1 outlet covered this
தாம்பரம் - சென்னை கடற்கரை புறநகர் ரயில் சேவை இன்று ரத்து
How outlets told it

பராமரிப்புப் பணிகள் காரணமாக தாம்பரம் - சென்னை கடற்கரை இடையேயான புறநகர் ரயில் சேவை இன்று (செப். 14) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் - சென்னை கடற்கரை இடையேயான வழித்தடத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று (செப். 14) பிற்பகல் 2.25 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் கடற்கரை ரயில் ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல், பிற்பகல் 3.45 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் புறநகர் ரயில் சேவையும் ரத்து செய்யப்படுகிறது.
பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்தவுடன் வழக்கமான ரயில் சேவைகள் தொடர்ந்து இயக்கப்படும்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: செப். 14 நிலவரம்!Tambaram - Chennai Beach suburban train service cancelled today
