Religion and culture · 1 outlet covered this

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ரயில்: சேலம் வழியாக சென்னை சென்டிரல்-போத்தனூர் சிறப்பு ரயில் இயக்கம்..!

How outlets told it

News18 Tamil6518h ago

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ரயில்: சேலம் வழியாக சென்னை சென்டிரல்-போத்தனூர் சிறப்பு ரயில் இயக்கம்..!

Read at News18 Tamil
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ரயில்: சேலம் வழியாக சென்னை சென்டிரல்-போத்தனூர் சிறப்பு ரயில் இயக்கம்..!
Photo: News18 Tamil

Trending:சற்றுமுன்Disco With KSDid You KnowOTT SpotDecodeShort NewsI3 With KSFollow Usfacebooktwitterinstagramyoutubeவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ரயில்: சேலம் வழியாக சென்னை சென்டிரல்-போத்தனூர் சிறப்பு ரயில் இயக்கம்..!Reported by:Srinivasan KPublished by:Muthu KathanLast Updated:Sep 13, 2026 9:37 PM ISTவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் மற்றும் போத்தனூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.1/5நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வருகிற 14-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் அரசு விடுமுறை என்பதால் பல்லாயிரக்கணக்கான பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு வந்து செல்வார்கள். இதன்காரணமாக ஏற்படும் கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை சென்டிரல்-போத்தனூர் இடையே சிறப்பு ரயில் (வண்டி எண் : 06023) இயக்கப்படுகிறது.2/5இந்த ரயில் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து செப். 11 (வெள்ளிக்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக மறுநாள் அதிகாலை 5 மணிக்கு சேலம் வந்தடையும்.3/5சேலம் ரயில் நிலையத்திலிருந்து காலை 5.03 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் வழியாக போத்தனூருக்கு காலை 9 மணிக்கு சென்றடையும்.4/5மறுமார்க்கத்தில் போத்தனூர்-சென்னை சென்டிரல் இடையே சிறப்பு ரயில் (06024) போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து வருகிற 14-ந் தேதி இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு வழியாக சேலத்துக்கு மறுநாள் நள்ளிரவு 1.47 மணிக்கு வரும்.5/5சேலம் ரயில் நிலையத்திலிருந்து 1.50 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் வழியாக சென்னை சென்டிரல் ரயில் நிலையத்துக்கு காலை 9.25 மணிக்கு சென்றடையும். இந்த தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.