Religion and culture · 1 outlet covered this

விநாயகர் சதுர்த்தி: சென்னையிலிருந்து எந்தெந்த ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..? முழு விவரம்!

How outlets told it

News18 Tamil654d ago

விநாயகர் சதுர்த்தி: சென்னையிலிருந்து எந்தெந்த ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..? முழு விவரம்!

Read at News18 Tamil
விநாயகர் சதுர்த்தி: சென்னையிலிருந்து எந்தெந்த ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..? முழு விவரம்!
Photo: News18 Tamil

Trending:சற்றுமுன்பட்ஜெட் தொடர்Disco With KSDid You KnowOTT SpotShort NewsI3 With KSFollow Usfacebooktwitterinstagramyoutubeவிநாயகர் சதுர்த்தி: சென்னையிலிருந்து எந்தெந்த ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..? முழு விவரம்!Published by:Karthi KLast Updated:Sep 10, 2026 3:04 PM ISTவிநாயகர் சதுர்த்திக்காக சென்னையிலிருந்து தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 1/5விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதி நாட்களையொட்டி சென்னையிலிருந்து தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கோவை உள்ளிட்ட ஊர்களுக்கு இன்று 585 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.2/5அதேபோல் நாளை 1255 பேருந்துகளும், சனிக்கிழமை 1030 பேருந்துகளும் ஞாயிற்றுக்கிழமை 650 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை 240 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.3/5மேலும் சனிக்கிழமை 240 பேருந்துகளும், ஞாயிற்றுக்கிழமை 105 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து நாளை முதல் 13ஆம் தேதி வரையிலான நாட்களில் கள்ளக்குறிச்சி, திருச்சி, வேலூர், ஓசூர், புதுச்சேரி உள்ளிட்டவற்றுக்கு தினசரி 110 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.4/5பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. திங்கள்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக 765 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.5/5மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு அரசின் இணையதளம் மற்றும் செயலி மூலம் முன்பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.