’மொக்கை ஜோக்கில் விழுந்தேன்’: கணவருடனான முதல் சந்திப்பை நினைவுகூர்ந்த நடிகை
Read at Daily ThanthiCinema and entertainment · 1 outlet covered this
’மொக்கை ஜோக்கில் விழுந்தேன்’: கணவருடனான முதல் சந்திப்பை நினைவுகூர்ந்த நடிகை
How outlets told it

Published on: 12 Sep 2026, 6:34 amலாஸ் ஏஞ்சலஸ், ஹாலிவுட் நடிகை எலிசபெத் ஓல்சன், தனது கணவரும் இசைக்கலைஞருமான ராபி ஆர்னெட்டை முதன்முறையாகச் சந்தித்த அனுபவம் குறித்துப் பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது. முதல் சந்திப்புராபி ஆர்னெட்டை தனது நெருங்கிய தோழி ஒருவர் மூலமாகத்தான் முதன்முதலில் சந்தித்ததாக எலிசபெத் ஓல்சன் கூறினார். இதுகுறித்து அவர் பேசுகையில், “அவருடைய இசைக்குழுவில் இருந்த எனது நெருங்கிய தோழி ஒருவர் மூலமாகத்தான் அவரை சந்தித்தேன். நாங்கள் அனைவரும் ஒன்றாக விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்தோம். அப்போது அவர் ஒரு மொக்கையான ஜோக்கை சொன்னார். அவர் முழுவதுமாக வெள்ளை நிற ஆடையை அணிந்திருந்தார். அவரும் எனது நண்பர் சார்லியும் என்னை கடந்து சென்றபோது, 'நான் முழுவதும் வெள்ளை நிறத்தில் இருப்பதால் நான் அவர்களுக்கு தெரிவேனா?' என்று கேட்டார். அதாவது, தான் ஒரு பேய்போல இருப்பதாக அவர் நினைத்துக்கொண்டார். அது உண்மையில் ஒரு மொக்கையான ஜோக் தான். இருந்தாலும், அவரிடம் ஏதோ ஒரு விஷயம் இருந்தது" என்றார். ராபியின் குணம்ராபி ஆர்னெட்டின் குணநலன்கள் குறித்து எலிசபெத் ஓல்சன் பாராட்டி பேசினார்.“அவர் மிகவும் அன்பானவர். யாருடனும் எளிதாக பழகக்கூடியவர். மற்றவர்கள் பேசுவதையும் நன்றாக கேட்பார். தான் சந்திக்கும் ஒவ்வொருவரை பற்றியும் தெரிந்துகொள்ள அவர் மிகவும் ஆர்வமாக இருப்பார்” என்று அவர் தெரிவித்துள்ளார். ராபி ஆர்னெட்ராபி ஆர்னெட் அமெரிக்க இசைக்கலைஞரும் எழுத்தாளரும் ஆவார். எலிசபெத் ஓல்சனும் ராபி ஆர்னெட்டும் 2019-ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். பின்னர் 2020-ஆம் ஆண்டு ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டனர். திருமண விழாவை பெரிய அளவில் நடத்தாமல் இருவரும் எளிமையாக செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
