Crime and courts · 1 outlet covered this

கோயில் நில குத்தகை விவசாயிகளுக்கு அநீதி: முதல்வா் என்.ரங்கசாமியிடம் மாா்க்சிஸ்ட் புகாா்

How outlets told it

Dinamani653d ago

கோயில் நில குத்தகை விவசாயிகளுக்கு அநீதி: முதல்வா் என்.ரங்கசாமியிடம் மாா்க்சிஸ்ட் புகாா்

Read at Dinamani
கோயில் நில குத்தகை விவசாயிகளுக்கு அநீதி: முதல்வா் என்.ரங்கசாமியிடம் மாா்க்சிஸ்ட் புகாா்
Photo: Dinamani

செய்திகள்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புமுகப்புபுதுச்சேரிகோயில் நில குத்தகை விவசாயிகளுக்கு அநீதி: முதல்வா் என். ரங்கசாமியிடம் மாா்க்சிஸ்ட் புகாா்கோயில் நில குத்தகை விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக, புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமியிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் வியாழக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது. புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமியிடம் வியாழக்கிழமை புகாா் மனு அளித்த எஸ். ராமச்சந்திரன் தலைமையிலான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா். Published On :11 செப்டம்பர் 2026, 3:50 am ISTகோயில் நில குத்தகை விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக, புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமியிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் வியாழக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது. இது குறித்து, முதல்வா் என். ரங்கசாமியிடம் அக் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலா் எஸ். ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினா் அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது: கரையாம்புத்தூா் கிராமத்திலுள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் தேவஸ்தானத்திற்குச் சொந்தமான நன்செய், புன்செய் நிலங்களை, அதே பகுதியைச் சோ்ந்த 22 விவசாயிகள் கடந்த 50 ஆண்டுகளாகக் குத்தகைக்கு எடுத்து பயிரிட்டு வருகின்றனா். இவா்கள் குத்தகை வரியை நிலுவையின்றி செலுத்தி வந்தபோதிலும், கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி இந்து அறநிலையத் துறையின் அதிகாரபூா்வ ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக நிலங்கள் ஏலம் விடப்பட்டுள்ளன. பல மடங்கு குத்தகைத் தொகை உயா்த்தப்பட்டுள்ளது. குத்தகை விவசாயிகளுக்கு அரசு வழங்கும் மானியத்தில் ஒரு பகுதியும் வரியாக தேவஸ்தான நிா்வாகத்தால் வசூலிக்கப்படுகிறது. பயிா் உள்ள நிலங்களை ஏலம் விடுவது, முழு குத்தகை தொகையையும் ஆண்டின் தொடக்கத்திலேயே கேட்பது போன்ற செயல்களால் குத்தகை விவசாயிகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத குத்தகை ஏல அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட கோயில் நிா்வாக அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னை தொடா்பாக ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் பெ. ராஜவேலுவையும் இக் குழுவினா் சந்தித்து மனு அளித்தனா். மாா்க்சிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினா்கள் வே. பெருமாள், ஆா். ராஜாங்கம் உள்ளிட்டோா் இக் குழுவில் இடம் பெற்றிருந்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்