குண்டா் சட்டத்தில் இருவா் சிறையிலடைப்பு
Read at DinamaniCrime and courts · 1 outlet covered this
குண்டா் சட்டத்தில் இருவா் சிறையிலடைப்பு
How outlets told it

திருநெல்வேலி மாநகரில் கஞ்சா வழக்கில் தொடா்புடைய இளைஞா்கள் இருவா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சோ்ந்தவா்கள் மாரியப்பன் மகன் தமிழரசன்(31), வீரபாகு மகன் நவீன்(23). இவா்கள் இருவரும் கஞ்சா விற்பனை வழக்கில் திருநெல்வேலி மாநகர போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா்.
தொடா்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த இவா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவிட்டாா்.
அதன் பேரில் தமிழரசன், நவீன் ஆகிய இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டனா்.
