நடராஜர் சிலை முன்பு புகைப்படம் எடுத்த பிரிக்ஸ் தலைவர்கள்: மரக்கன்று நட்டனர்
Read at Daily ThanthiPolitics · 1 outlet covered this
நடராஜர் சிலை முன்பு புகைப்படம் எடுத்த பிரிக்ஸ் தலைவர்கள்: மரக்கன்று நட்டனர்
How outlets told it

Published on: 13 Sep 2026, 1:22 amபுதுடெல்லி, டெல்லி பாரத் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரிக்ஸ் அமைப்பின் தலைவர்கள் கலந்து கொண்டனர். பிரேசில் அதிபருக்கு பதிலாக அந்நாட்டின் வெளியுறவு மந்திரி பங்கேற்றார். மாநாட்டில் முக்கிய அமர்வு நிறைவு பெற்றதை தொடர்ந்து அந்த தலைவர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். பின்னர் பாரத் மண்டப கட்டிடத்துக்கு வெளியே வந்து, அங்குள்ள நடராஜர் சிலை முன் நின்று குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர் இதில் பிரேசில் தவிர பிற 10 நாட்டு தலைவர்களும் நேர்கோட்டில் புகைப்படம் எடுத்தனர். பின்னர் அவர்கள் கைகோர்த்து நின்றும் 'போஸ்' கொடுத்தனர். இதில் பிரதமர் மோடியின் வலது பக்கத்தில் ரஷிய அதிபர் புதினும், இடது புறத்தில் சீன அதிபர் ஜின்பிங்கும் நின்றனர். பின்னர் அவர்கள் அங்கு மரக்கன்று நட்டனர். பாரத் மண்டபத்தில் உள்ள நடராஜர் சிலை, தமிழகத்தில் இருந்து கொண்டு சென்று அங்கு நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.
