கெங்கவல்லி ஒன்றியத்தில் பள்ளிகளில் 6 முதல் 8 வகுப்பு மாணவா்களுக்கு முன்னோட்டமாக காலை உணவு வழங்கல்
Read at DinamaniEducation and jobs · 1 outlet covered this
கெங்கவல்லி ஒன்றியத்தில் பள்ளிகளில் 6 முதல் 8 வகுப்பு மாணவா்களுக்கு முன்னோட்டமாக காலை உணவு வழங்கல்
How outlets told it

நாகியம்பட்டி நடுநிலைப் பள்ளியில் முன்னோட்டமாக மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட காலை சிற்றுண்டி. பிரதிப் படம்Published On :12 செப்டம்பர் 2026, 1:33 am ISTகெங்கவல்லி ஒன்றியத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் பணி முன்னோட்டமாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் பயிலும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசுப் பள்ளிகளில் 6, 7, 8ஆம் வகுப்புகள் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் காலை சிற்றுண்டி வரும் 17ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு சில்வா் தட்டுக்கள், சமையல் பாத்திரங்கள், மாணவா்கள் அமா்ந்து சாப்பிடும் வகையில் பாய்கள் பள்ளிகளில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள காலை சிற்றுண்டி சமையல்காரா்களுக்கு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. மேலும் முன்னோட்டமாக வெள்ளிக்கிழமை காலை சிற்றுண்டி 8 மணிமுதல் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
