1 outlet covered this

புதுக்கோட்டையில் 13 கோவில்களில் இரவு நேர காவலர் பணி... முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்..!

How outlets told it

News18 Tamil6521h ago

புதுக்கோட்டையில் 13 கோவில்களில் இரவு நேர காவலர் பணி... முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்..!

Read at News18 Tamil
புதுக்கோட்டையில் 13 கோவில்களில் இரவு நேர காவலர் பணி... முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்..!
Photo: News18 Tamil

Trending:சற்றுமுன்Disco With KSDid You KnowOTT SpotDecodeShort NewsI3 With KSFollow UsfacebooktwitterinstagramyoutubeReported by:Sneha VijayanPublished by:Muthu KathanLast Updated:Sep 13, 2026 7:08 PM ISTபுதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 கோவில்களில் இரவு நேர காவலர் பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.1/4புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 கோவில்களில் காலியாக உள்ள இரவு நேர காவலர் பணியிடங்களை முன்னாள் படைவீரர்களைக் கொண்டு நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, 62 வயதிற்கு உட்பட்டவர்களாகவும், திடகாத்திரமான உடல்நலத்துடன் பணியாற்றும் தகுதியும் விருப்பமும் கொண்ட முன்னாள் படைவீரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.2/4விண்ணப்பிக்க விரும்பும் முன்னாள் படைவீரர்கள் தங்களது அசல் படைவிலகல் சான்று / அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒன்று ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.3/4விண்ணப்பங்களை புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். எனவே, மேற்கண்ட தகுதிகளை உடைய விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா தெரிவித்துள்ளார்.4/4தகுதி: 62 வயதிற்குள், திடகாத்திரமான முன்னாள் படைவீரர்கள். பணியிடம்: புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 கோவில்கள். விண்ணப்பிக்கும் முறை: நேரில் அல்லது அஞ்சல் மூலம். விண்ணப்பிக்க வேண்டிய இடம்: மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகம்.