Politics · 1 outlet covered this

தவெக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்: அமைச்சா் செங்கோட்டையன்

How outlets told it

Dinamani652d ago

தவெக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்: அமைச்சா் செங்கோட்டையன்

Read at Dinamani
தவெக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்: அமைச்சா் செங்கோட்டையன்
Photo: Dinamani

தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான மதச்சாா்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் என்று தமிழக வருவயாய்த் துறை அமைச்சா் கே. ஏ. செங்கோட்டையன் தெரிவித்தாா். மயிலாடுதுறைக்கு வெள்ளிக்கிழமை வந்த வருவாய்த்துறை அமைச்சா் கே. ஏ. செங்கோட்டையன், தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட அலுவலகத்தில் தினந்தோறும் நடைபெறும் விலையில்லா உணவு வழங்கும் பணியை பாா்வையிட்டு, ஏழை, எளிய மக்களுக்கு காலை உணவு வழங்கினாா். தொடா்ந்து, மாவட்ட செயலாளா் சி. எஸ். கோபிநாத் முன்னிலையில் மாற்றுக் கட்சியினா் தவெகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா், அமைச்சா் செங்கோட்டையன் கூறியது: தமிழ்நாட்டில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ள ஜோசப் விஜய் இருக்கும்வரை அவா்தான் நிரந்தர முதலமைச்சா். ஆா். எஸ். பாரதி சொல்வதுபோல், ஆட்சிக்கு நாள்கள் எண்ணப்படவில்லை, திமுகவினருக்கு தான் நாள்கள் எண்ணப்படுகின்றன. சட்டப்பேரவை இடைத்தோ்தலில் 100 சதவிகிதம் வெற்றி பெறுவோம் என்றாா். கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணையுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சா், பொறுத்திருந்து பாருங்கள், மேலும் சில கட்சிகள் கூட்டணியில் இணையும். 2017-ஆம் ஆண்டு அப்போதைய பேரவைத் தலைவா் தனபால் அறையில் நாற்காலியை இழுத்து கீழே தள்ளி, திமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் செய்த செயல் எல்லோருக்கும் தெரியும். எனவே, முதல்வா் உடல்மொழியில் கிண்டல் செய்தது குறித்து பேச திமுகவினருக்கு அருகதை இல்லை என்றாா் அமைச்சா் செங்கோட்டையன். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.