கேழ்வரகில் மகசூல் கொட்ட வேண்டுமா.? - விதைப்பு முதல் அறுவடை வரை இந்த தகவல்கள் தெரிஞ்சுக்கோங்க
Read at News18 TamilBusiness · 1 outlet covered this
கேழ்வரகில் மகசூல் கொட்ட வேண்டுமா.? - விதைப்பு முதல் அறுவடை வரை இந்த தகவல்கள் தெரிஞ்சுக்கோங்க
How outlets told it

Trending:சற்றுமுன்Disco With KSDid You KnowOTT SpotDecodeShort NewsI3 With KSFollow Usfacebooktwitterinstagramyoutubeகேழ்வரகில் மகசூல் கொட்ட வேண்டுமா.? - விதைப்பு முதல் அறுவடை வரை இந்த தகவல்கள் தெரிஞ்சுக்கோங்கReported by:YuvathikaPublished by:pradeepa mLast Updated:Sep 13, 2026 3:52 PM ISTகேழ்வரகு சாகுபடியில் அதிக லாபம் பெறுவதற்கான வழிமுறைகள், நாற்றங்கால் அமைப்பது முதல் அறுவடை செய்வது வரையிலான முக்கிய தகவல்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு முறைகள் இந்த தொகுப்பில் உள்ளன. விவசாயிகள் நல்ல மகசூல் பெற இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றலாம்.1/5சந்தையில் அதிக அளவில் தேவைப்படும் தானியங்களில் கேழ்வரகும் முக்கிய இடம் பெற்றுள்ளது. இதனால் கேழ்வரகை முறையாக சாகுபடி செய்து விவசாயிகள் நல்ல வருமானம் பெறலாம். கேழ்வரகு சாகுபடிக்கு முன்பு விளைநிலத்தை 2 அல்லது 3 முறை நன்கு உழவு செய்து மண்ணை புழுதியாக்கி சமப்படுத்த வேண்டும். பின்னர் நிலத்தின் தேவைக்கேற்ப நல்ல வடிகால் வசதியுடன் மேட்டுப்பாத்திகளை அமைக்க வேண்டும்.2/5கேழ்வரகு நாற்றங்கால் அமைக்க ஏக்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 2 கிலோ விதையை மணலுடன் கலந்து சீராக விதைக்க வேண்டும். விதைத்தவுடன் உயிர்நீர் பாய்ச்சி, மண்ணின் தன்மைக்கு ஏற்ப தொடர்ந்து பாசனம் செய்ய வேண்டும். சரியான வயதுடைய நாற்றுகளைப் பறித்து, குத்துக்கு 2 நாற்றுகள் வீதம் 15 x 15 செ. மீ. இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். நடவு செய்த இடங்களில் நாற்றுகள் பட்டுப்போனால், 7-வது நாளில் அந்த இடங்களில் மட்டும் மீண்டும் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.3/5நேரடி விதைப்பு முறையிலும் கேழ்வரகை சாகுபடி செய்யலாம். இதற்காக கேழ்வரகு, கம்பு, சோளம், வரகு, திணை, சாமை, குதிரைவாலி, பனிவரகு உள்ளிட்ட சிறுதானிய விதைகளை தேவையான அளவில் நிலத்தில் விதைக்கலாம். கேழ்வரகு பயிருக்கு பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்துகளை முறையாக வழங்க வேண்டும். மணிச்சத்து முழுவதையும், தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்தில் பாதி அளவையும் அடியுரமாக இட வேண்டும். மீதமுள்ள தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்துகளை சமமாகப் பிரித்து இரண்டு முறையாக மேலுரமாக இட வேண்டும்.4/5பயிர் பாதுகாப்பிலும் விவசாயிகள் கவனம் செலுத்த வேண்டும். இலை சுருட்டுப்புழு, தண்டு துளைப்பான், கதிர் நாவாய்ப்பூச்சி போன்றவற்றால் ஏற்படும் பாதிப்பை குறைக்க பரிந்துரைக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த வேண்டும். அசுவினி மற்றும் பால் ஒழுகல் நோய் போன்ற பாதிப்புகளைக் கட்டுப்படுத்த தேவையான ரசாயன மருந்துகளை வேளாண் பரிந்துரைப்படி பயன்படுத்தலாம். மேலும் தாவர பூச்சிக்கொல்லியாக 5 சதவீத வேப்ப விதைக் கரைசலை தெளிப்பதன் மூலமும் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.5/5கேழ்வரகு பயிர் முழுமையாக முதிர்ச்சியடைந்த பின்னர் அறுவடை செய்ய வேண்டும். கதிர்கள் ஒரே நேரத்தில் முதிர்ச்சியடையாததால், முதல் அறுவடை செய்த பின்னர் 7 முதல் 15 நாட்களுக்குள் மீதமுள்ள கதிர்களையும் முற்றிலுமாக அறுவடை செய்ய வேண்டும். அறுவடை செய்யப்பட்ட கேழ்வரகு கதிர்களை ஒன்று அல்லது இரண்டு நாட்கள் குவியலாக வைத்திருந்த பின்னர் பிரித்து எடுத்து வெயிலில் நன்கு உலர்த்த வேண்டும். முறையான சாகுபடி, உர மேலாண்மை, பயிர் பாதுகாப்பு மற்றும் அறுவடை முறைகளை பின்பற்றுவதன் மூலம் கேழ்வரகு சாகுபடியில் விவசாயிகள் நல்ல மக
