தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - தமிழக அரசு புதிரான விளக்கம்.!
Read at Polimer NewsCrime and courts · 1 outlet covered this
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - தமிழக அரசு புதிரான விளக்கம்.!
How outlets told it

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு பொறுப்பானவர்கள் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்யக்கோரிய வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், தமிழ்நாடு அரசு தரப்பில் புதிரான விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரையின் அடிப்படையில் ஏற்கனவே உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது. எனவே, அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைகளை அப்படியே அமல்படுத்த வேண்டும் என்பது சட்டப்பூர்வமான கடமை கிடையாது என்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில், கடந்த ஆட்சியில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என அமைச்சர்கள் கேள்வி எழுப்பி, உங்களிடம் தானே அறிக்கை உள்ளது நீங்கள் நடவடிக்கை எடுக்கலாம் என எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறிய நிலையில், கடும் வாக்குவாதம் ஏற்பட்டது நினைவுகூறத்தக்கது.
