World · 1 outlet covered this

உலகம் பலவிதம்

How outlets told it

உலகம் பலவிதம்
Photo: Dinamani

அடுத்து நிலாப்போர்

சந்திரனுக்கு பல நாடுகள் தங்கள் விண்கலன்களை அனுப்பத் தொடங்கி, அங்கு தங்களுக்கான இடத்தை ஆக்கிரமிப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றன. அடுத்த போர்க்களம் சந்திரன்தான் என்று சீனாவில் உள்ள நார்த்வெஸ்ட்ர்ன் பாலிடெக்னிகல் யூனிவர்சிடி பேராசிரியர்கள் கூறியுள்ளனர்.

பூமிக்கும் சந்திரனுக்கும் ஈர்ப்புவிசை வேறுவேறு. ஆகவே பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே இந்த ஈர்ப்பு விசை குறைவாக இருக்கும் பகுதியில் விண்கலன்களை நிறுத்துவது, செலுத்துவது எளிது. செலவும் குறைவு. ஆனால், இந்தப் பகுதிகளில் தங்கள் விண்கலன்களை நிறுத்தி, மற்ற நாடுகளுக்கு இடையூறு செய்யவும் முடியும் என்கிறார்கள். அதாவது இப்போது ஹோர்முஸ் நீரிணையை மூடி, உலக நாடுகளுக்கு சிக்கல் ஏற்படுத்தியுள்ளதைப்போல, பூமி-சந்திரன் இடையே உள்ள பாதையிலும் தடை ஏற்படுத்தலாம் என்கிறார்கள்.

ராஜாளி விலை ரூ 5.85 கோடி

அபுதாபியில் ஆகஸ்ட் 30-ஆம் தேதி விலங்குகள், பறவைகளுக்கான சர்வதேச கண்காட்சி நடந்தது. இதில் ஓர் அழகிய வகை வெள்ளை நிற ராஜாளி 15 லட்சம் தசிஹ்ரம் - இந்திய மதிப்பில் ரூ. 5.85 கோடிக்கு ஏலம் போனது. இந்த ராஜாளியை அமெரிக்காவில் மார்க் மோக்லிச் பால்கன் பார்ம் வளர்த்தது. இதன் எடை ஒரு கிலோ, நீளம் 16.5 அங்குலம். ஷைக்கா அல் மன்சூரி என்ற சிறுமியின் விருப்பத்துக்காக இந்தப் பறவையை வாங்கிக்கொடுத்துள்ளார் அவரது மாமா.

ரோபோ ரோஷம்

ரஷ்யாவில் ஒரு எலக்ட்ரானிக் கடைக்கு வந்த வாடிக்கையாளரிடம் கடை உரிமையாளர் ஓர் எந்திரனை அறிமுகம் செய்கிறார். வந்த நபர், எந்திரனை பின்னுக்குத் தள்ளுகிறார். இதனால் கோபமடைந்த ரோபோ, வரிந்து கட்டிக்கொண்டு கைகளை மடக்கித் தாக்க வந்ததுடன், எட்டி உதைக்கத் தொடங்கியது.

கடை ஊழியர்கள் எந்திரனைப் பிடித்துக் கட்டுப்படுத்த முயன்றனர். இந்த விடியோ சமூக ஊடகங்களில் பரவியது. பல ஓட்டல்களில் உணவு பரிமாறுவதற்கு ரோபோ பயன்படுத்தப்படுகிறது. வாடிக்கையாளர் தப்பாகப் பேசினால் அடி உதைதான்.

ஆசிரியை உலக அழகி

வியத்நாமில் நாடிராங் நகரில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் 24 வயதான டொமினிக் குடியரசைச் சேர்ந்த ஜோகிரி மோலா , உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டார். இவர் ஓர் ஆசிரியை, ஊடகர், சமூகப்பணியில் ஈடுபடுபவர். குழந்தைகள் ஆங்கிலம் கற்கவேண்டும் என்பதற்காக 'நாளைய குரல்கள்' என்ற அமைப்பை நடத்தி வருகிறார். டி. வி. சேனலில் நிகழ்ச்சி

களைத் தொகுத்து வழங்குகிறார். கல்லூரியில் இலக்கியம் சொல்லித் தருகிறார். 24 வயதில் இத்தனை பணிகளையும் செய்து கொண்டு, அழகுப் போட்டியிலும் பங்குகொண்டு வெற்றி பெற்றுள்ளார். 1982-ஆம் ஆண்டுக்குப் பிறகு, இப்போதுதான் டொமினிக் குடியரசுப் பெண் ஒருவர் உலக அழகியாகத் தேர்வாகியிருக்கிறார்.

தி. செ.