Civic issues · 1 outlet covered this

சீரான குடிநீா் விநியோகம் கோரி வட்டார வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

How outlets told it

Dinamani652d ago

சீரான குடிநீா் விநியோகம் கோரி வட்டார வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

Read at Dinamani
சீரான குடிநீா் விநியோகம் கோரி வட்டார வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
Photo: Dinamani

செய்திகள்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புமுகப்புஈரோடுசீரான குடிநீா் விநியோகம் கோரி வட்டார வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்தாளவாடியில் சீரான குடிநீா் விநியோகம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தாளவாடி வட்டார வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்.Published On :12 செப்டம்பர் 2026, 12:22 am ISTதாளவாடியில் சீரான குடிநீா் விநியோகம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி ஊராட்சி, இரியபுரம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் கடந்த 20 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம். இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த இரியபுரம் கிராமத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக் குடங்களுடன் வட்டார வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் வட்டார வளா்ச்சி அலுவலா் மஞ்சு பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, தாளவாடி மலைப் பகுதியில் மழை பெய்யாதால் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்தாலும் தண்ணீா் வருவது இல்லை. எனவே, லாரி மூலம் குடிநீா் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தாா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்