Politics · 1 outlet covered this

இடைத்தேர்தல் மட்டுமின்றி அனைத்து தேர்தல்களிலும் தவெக வெற்றி பெறும்: பேரவை துணைத் தலைவா் ரவிசங்கர்

How outlets told it

Dinamani652d ago

இடைத்தேர்தல் மட்டுமின்றி அனைத்து தேர்தல்களிலும் தவெக வெற்றி பெறும்: பேரவை துணைத் தலைவா் ரவிசங்கர்

Read at Dinamani
இடைத்தேர்தல் மட்டுமின்றி அனைத்து தேர்தல்களிலும் தவெக வெற்றி பெறும்: பேரவை துணைத் தலைவா் ரவிசங்கர்
Photo: Dinamani

இடைத்தேர்தல் மட்டுமின்றி இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் தவெகதான் வெற்றி பெறும் என்று பேரவை துணைத் தலைவா் ரவிசங்கர் தெரிவித்துள்ளார். திருச்சியில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காவல் துறை மானிய கோரிக்கையின் போது முதல்வர் விஜய் கேள்விகளுக்கு முறையாக பதிலளிக்கவில்லை என த. வெ. க அரசிற்கு ஆதரவு தெரிவித்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் சண்முகம் தெரிவித்திருப்பது குறித்த கேள்விக்கு: சட்டப்பேரவை விவாதங்கள் சார்ந்து நான் வெளியில் எதுவும் சொல்ல முடியாது என்றார். கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொள்கை வேறு, எங்கள் கட்சியின் கொள்கை வேறு. அவர்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். திமுக கூட்டணியில் இருந்த போதும் அந்த ஆட்சியை அவர்கள் விமர்சனம் செய்து உள்ளார்கள். அதேபோலத்தான் எங்கள் ஆட்சியை விமர்சனம் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டை சரி செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அது எப்போது சரி செய்யப்படும் என்கிற கேள்விக்கு தற்போது பதில் அளிக்க முடியாது. தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு என்பது போலியாக பரப்பப்படும் செய்தி. தமிழ்நாட்டில் மின் துறை, மருத்துவ துறை என அனைத்து துறைகளிலும் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியில் இருக்கிறதா என்பதை அந்த கட்சியின் தலைவர்களிடம்தான் கேட்க வேண்டும். ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். எனவே, இந்த இடைத்தேர்தலில் மட்டுமல்ல வருகின்ற அனைத்து தேர்தல்களிலும் நாங்கள்தான் வெற்றி பெறுவோம். டாஸ்மாக் கடைகளில் பத்து ரூபாய் பணம் வாங்காமல் தற்போது மதுபானங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் போதைப் பொருட்கள் பயன்பாடு கடந்த 15 ஆண்டுகளாக இருக்கக்கூடிய வியாதி. அதை சரி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என்று தெரிவித்தார்.