திமுகவினரின் பேச்சை சகிக்க முடியவில்லை - மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்..!
Read at Daily ThanthiPolitics · 1 outlet covered this
திமுகவினரின் பேச்சை சகிக்க முடியவில்லை - மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்..!
How outlets told it

Published on: 13 Sep 2026, 1:37 amசென்னை, நிர்மல் குமார் தாயாரை இழிவு படுத்துவதை எப்படி திமுக தலைவர் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் என பெ. சண்முகம் கேள்வி எழுப்பி உள்ளார். சகிக்க முடியவில்லைஇது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது. திமுக தலைவர்களில் சிலர் தொடர்ந்து பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதும் அதைக் கேட்டு தொண்டர்கள் ஆர்ப்பரிப்பதும் சகிக்க முடியவில்லை. அமைச்சர் நிர்மல் குமார் பேசியதை கண்டியுங்கள். அவருடைய தாயாரை இழிவு படுத்துவதை எப்படி திமுக தலைவர் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். கண்ணியம் தவறுவது தொடர்கிறதுபொதுவெளியில் பெண்களை இழிவு படுத்தி பேசுபவர் யாராக இருந்தாலும் அந்தந்த கட்சி தலைமை கண்டிக்கவும், ஒழுங்குபடுத்தவும் முன்வர வேண்டும். சில திமுகவினர் "கண்ணியம்" தவறுவது தொடர்கிறது. "கட்டுப்பாடு" நிலை நிறுத்தும் "கடமை"யை திமுக. தலைவர் செய்வார் என்று நம்புகிறேன்.
